கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

மோசமான வானிலை காரணமாக கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது குறித்த மரம் விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொழும்பில் பஸ் மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

அக்டோபர் 30ஆம் திகதி அதே சாலையில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் தெரிவிக்கையில்

நேற்றைய மோசமான வானிலை காரணமாக கொழும்பில் 36 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக . குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் கொழும்பு மாநகர சபையிடம் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஆள் இல்லை என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்

யானையுடன் கொழும்பில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும்

சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்

எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானைகள் – மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை

பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து,
போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

சீனா போர் கப்பலில் கொழும்பில்
Posted in இலங்கை செய்திகள்

சீனா போர் கப்பல் கொழும்பில்

சீனா போர் கப்பலில் கொழும்பில்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று (ஆகஸ்ட் 10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

இன்று (30) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளுக்கு இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகத்தை நாளை (16) எட்டரை மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

அன்றைய தினம் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும், அதன்படி பேலியகொட, வத்தளை, ஜா-எல கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகள் மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபையின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் இவ்வாறு இடை நிறுத்தப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு நோக்கி வரும் சில ரயில்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி ரயிலை மீண்டும் தண்டவாளத்தில்
இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

No posts found.
கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்

கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்

இலங்கை சுதந்திர தின நிகழ்வை அமைத்து கொழும்பு பகுதி எங்கும் பலத்த பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

பல வீதிகளை அடித்து மூட பட்டுள்ளன .

உலக நாடுகளில் இருந்து பல நாட்டு பிரதி நிதிகள் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் ,அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ,பாதுகாப்பு நாவடிக்கை இறுக்க பட்டுள்ளது .

No posts found.
கொழும்பில் குழந்தை கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் குழந்தை கடத்தல்

கொழும்பில் குழந்தை கடத்தல்

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தையைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் குழந்தை கடத்தல்

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் - கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்.

இதுபற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

“பொலிஸுக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம்.

கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும். மேலும் இது ஒரு பொலிஸ் ராஜ்யம் அல்ல. பொலிஸ் சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது.

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும். எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள்.

அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை. ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர காலங்கள் அல்ல.

போர் காலத்திலும் நான் இங்கே தான் இருந்துள்ளேன். அந்த காலத்திலேயே இதை பொறுத்துக்கொள்ளாதவன், நான். இன்று இந்த சமாதான காலத்தில் இந்த பொலிஸ் படிவங்களை வீடு

வீடாக கொண்டு சென்று பதிவு செய்வதா? உடன் நிறுத்துங்கள்!”, என சம்பந்தபட்ட அரசியல், மற்றும் நிர்வாக தரப்பினரிடம் நான் கூறியுள்ளேன்.

“அரகல”காரர்களை கொழும்பில் வீடு வீடாக தேடுவதாக ஒரு பொலிஸ் நிலைய அதிகாரி என்னிடம் சொன்னார்.

அவருக்கு நான் என்ன பதில் கூறினேன் என்பதை பகிரங்கமாக கூற முடியாது. அரகலையை வெள்ளவத்தை, பம்பலபிட்டியில் தேட வேண்டாம் எனவும் இவருக்கு கூறினேன். அதை எங்கே தேட வேண்டும் எனவும் கூறினேன்.

கொழும்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இத்தகைய நடவடிக்கை தொடருமானால், அவற்றை உடன் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என

ஊடகங்களை கோருகிறேன். நமது மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நாம் உடன் நடவடிக்கை எடுப்போம்.

இதுபற்றி, . சந்திரா பெர்னாண்டோ,
கொழும்பு பிரதி பொலிஸ் மாதிபர் சந்திரக்குமார, வெள்ளவத்தை பொறுப்பதிகாரி பிரசாந்த சில்வா,


பம்பலபிட்டி பொறுப்பதிகாரி பத்மலால் ஆகியோருக்கும் அறிவித்துள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.