இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்


இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது

சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது – பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு

நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின்

சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு

எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது.
தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை

    பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை

    பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான்கான் இன்று இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ,

    இரண்டு நாட்கள் இங்கே தங்கி இருக்கும் இவர் இரு நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பேசுவார்

    எனவும் புதிய ஒப்பந்தங்களில கைச்சாத்திடுவார் எனவும் தெரிவிக்க பட்டுளள்து

    இவரது இந்த வருகை இந்தியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

    Home » இம்ரான்கான்
    Posted in இலங்கை செய்திகள்

    பாகிஸ்தான் அதிபர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகை

    எதிர் வரும் வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இலங்கை வரவுள்ள நிலையில் அவருக்குரிய

    பாதுகாப்பினை வழங்கும் நோக்குடன் இலங்கைக்கு அவரது பாதுகாப்பு துறையினர் வருகை தந்துள்ளனர்

    அவர் செல்ல போகும் சாலைகள் ,மற்றும் தங்குமிடங்கள் என்பனவற்றை

    இவர்கள் ஆராய்ந்ததன் பின்னரே அவர் அங்கு வருகை தரவுள்ளமை குறிப்பிட தக்கது