Tag: ஆணின்
வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு , எருவில் கிராமத்தில் உள்ள மாலை வயல் பகுதியில் இருந்து சனிக்கிழமை (26) அன்று ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் அமைந்துள்ள அவரது வயலுக்குள் வேளாண்மையை பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளதுடன் துவிச்சக்கர வண்டியை குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது
வேளாண்மைச் செய்கையை பார்வையிட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ள நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி
வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்
ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்
ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள் ,உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா.
கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை சென்றுள்ளார்.
அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப் பை [uterus] என்று தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உருவாகும் ovary இருந்துள்ளது. ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்










