Tag: அறிவித்தல்
அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்
அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்
அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் ,அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு:
- 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி, 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது.
அதேபோல், அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.elections.gov.lk) சஞ்சரிப்பதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இத்தேர்தலின் போது குறித்த உள்ளுர் அதிகார சபை அதிகார இடப்பரப்பில் தேருநர்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவிருக்கின்ற அனைத்து அரச அலுவலர்கள்/ ஊழியர்கள், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும்,
- இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலர்கள்/ ஊழியர்கள், அஞ்சல் திணைக்கள் அலுவலர்கள்/ ஊழியர்கள், புகையிரதத் திணைக்கள அலுவலர்கள்/ ஊழியர்கள், முப்படைகளின், பொலிஸ் திணைக்களத்தின் முனைப்பான பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புப் படையணியின் அங்கத்தவர்கள், வேட்பாண்மை காரணமாக தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க முடியாதிருக்குமென்று அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலப்பகுதி முடிவடையும் வரை காத்திருக்காமல் தாமதமின்றி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கத் தகைமை பெறுகின்ற அனைவரும் தயவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இத்தேர்தலின் போது அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது அதற்கான தகவல்கள் 2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்பிலிருந்து சரியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
- அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சித்து விண்ணப்பதாரரின் ஆளடையாளம் குறித்து உறுதிசெய்துகொண்டு அத்தாட்சிப்படுத்த வேண்டுமென்றும், அத்தாட்சிப்படுத்திய விண்ணப்பங்களை இயன்றளவு விரைவாக குறித்த விண்ணப்பதாரர் தேருநராக பதிவுசெய்து கொண்டுள்ள மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2025.03.12 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்க வேண்டுமென்றும், அத்திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாதென்றும், உரிய திகதி பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்களும் பூரணமற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுமென்றும் அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தயவுடன் அறிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி இரு நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் அஞ்சலுக்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைப்பது மிகவும் உகந்ததென்று கருதப்படுகிறது.
- அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கு அவசியமான 2024 தேருநர் இடாப்புத் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2024 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்புக்கள் பின்வரும் இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
i. அனைத்து மாவட்ட செயலகங்கள் (கச்சேரிகள்)
(சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு)
ii. அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள்
(உரிய இடாப்புக்கள்)
iii. அனைத்து உள்ளூர் அதிகாரசபைகள்
(ஒவ்வோர் உள்ளூர் அதிகார இடப்பரப்புக்குரிய இடாப்புக்கள்)
iv. அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள்
(ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குரிய இடாப்புக்கள்) - தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நிகழ்நிலை முறையில் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
தேருநர் இடாப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிட்டிருக்காத விண்ணப்பதாரர்கள் மேற்படி இல. 04 இல் குறிப்பிடப்பட்டுள்ள இடமொன்றிலிருந்து தமது பதிவுக்குரிய தகவலகளைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பப்படினங்களைப் பூரணப்படுத்த வேண்டும்.
பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் ,அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக
வீரமுனை ,மருதமுனை, மண்டூர் , பகுதிகளிலும் அதிகளவான வீடு உடைத்து நகை, பணம் திருடுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
குறித்த சட்டவிரோத சம்பவங்களில் வீடுகள் உடைத்து திருடும் சம்பவம் இரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:30 மணிக்கும் இடையில் இடம்பெற்று வருவதுடன்
வீட்டின் ஜன்னல் கம்பிகள் மற்றும் ஓடுகள் பிரிக்கப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இடம் பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் சம காலங்களில் பல்வேறு பொலிஸ் நிலைய பகுதிகளிலும் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் பொது இடங்களில் தரித்து வைக்கப்பட்ட நிலையிலும் வயல் வேலை காரணமாக வீதி
ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு செல்லும் பொருட்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டு வருகின்றன.
மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் வைத்தியசாலை, பொதுச்சந்தை, நகரப் பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளிகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
எனவே இரவு நேரத்தில் வீட்டின் மறைவான இடங்களை பரீட்சித்து பெறுமதியான பொருட்களை பொதுமக்கள் பாதுகாப்பதுடன், வீட்டின் ஜன்னலுக்காக பொருத்தப்படும் கம்பியை உறுதியான வகையில் பொருத்தி
கொள்ளுமாறும், கூரை மின் விசிறி பயன்படுத்தும் வீடுகளில் அதிக திருட்டுகள் இடம்பெறுவதனால் அதிக சத்தம் இடும் இவ்வாறான மின் விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.
அத்துடன் பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ தேவையற்ற முறையில் சந்தேகத்திற்கிடமாக முகக்கவசம் மற்றும் தொப்பி அல்லது தலைக்கவசம்
அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானமாக இருப்பதுடன் சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்தமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அதன்படி, ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.
குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஒரு முதலீட்டாடளர் குறைந்தபட்சம் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.














