Tag: அச்சம் ஏனோ
Posted in கவிதைகள்
அச்சம் ஏனோ
Author: நிருபர் காவலன் Published Date: 23/05/2025
அச்சம் ஏனோ
நீ பேச மறுப்பதை
சொல்வதற்கு அச்சமா
என் மனதின் அன்பு
புண்படும் என்ற எண்ணமா
என் பார்வை பார்த்தவுடன்
உன் விழிகள் வழி தவிர்ந்ததேன்?
நீ உளற விரும்பும் வார்த்தைகள்
உன் நாவுக்குள் சிக்கிக்கொண்டதேனோ?
நான் கோபித்தவளல்ல…
கவலை கொண்டவளும் இல்லை…
உன் மனம் சொல்வதற்குள்
நான் உணர்ந்து விடுவேன்
உண்மை எல்லை அதை.
பேசாததால் என் காதல் மாறாது,
நீ என் மௌனத்தில் கூட வாழ்வாய்.
ஆனால் ஒரு நாள், பயம் ஒதுங்கும் போது
உன் மொழியில் நான்
பூக்கும் வண்ணம் கேட்கவேணும்
பயம் ஒன்றே தடை என்றால்,
அதை நான் ஏற்றுக்கொள்வேன்.
பேசாமல் காதலிக்கலாம்,
ஆனால் பேசும் காதலே நிலைக்கும்
அதை மறந்துவிடாதே என் அன்பே.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு








