Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது

காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது

இலங்கையில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் காவல்துறையினர் விசேட அணிகள் நடத்திய திடீர்

சுற்றிவளைப்பில் மேல் மாகாணத்தில் 433 சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் குத்தி கொலை – எகிறும் படுகொலைகள்

ஒருவர் குத்தி கொலை – எகிறும் படுகொலைகள்

கடந்த தினம் இரவு பஸ்கொட பிரதேசத்தில் சமையலறை கத்தியால் ஒருவர்

சரமாரியாக குத்தி படுகொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவ்வாறு மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இந்த படுகொலையில் முடிந்துள்ளது

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் – மக்கள் அவதி

வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் – மக்கள் அவதி

மன்னார் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை பெய்த

கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம்,

ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உற்பட பல்வேறு கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளன.

மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான

முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது.

முன்னாள் பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் ஆகியோரினால், கால்வாய்களுக்கு அருகில் வழங்கப்பட்ட

காணிகள் முற்றிலும் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோடவும் தடையாக உள்ளது.

எனவே மன்னார் நகர சபை மற்றும் பிரதேச செயலகம் உடனடியாக குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டம்

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டம்

வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்களால் ஆர்பாட்டம் மற்றும் பணிபுறக்கணிப்பு இன்று (02) முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் முற்பகல் 11 மணிவரையும் இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமது பணி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுத்தும் வகையில் கைவிரல் அடையாள

பதிவுசெய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தவிர்த்து பழைய முறையின்படியே தாங்கள் கையொப்பம் இடுவதற்கான

செயற்பாட்டை தொடரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “அரச சட்டங்கள் அனைவருக்கும் சமன், எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி, மன அமைதியுடன்

பணிசெய்ய விடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்

கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்

கண்டி பல்லேகல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு இடம்பெற்றுள்ளது.

புவி சரிதவியல் மற்றும் சுரங்க அகழ்வு அலுவலகம் இது தொடர்பாக தெரிவிக்கையில்

இன்று (2) காலை 7.06 மணியளவில் இது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பிரிவு

தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கண்டி பல்லேகல

உள்ளிட்ட சில பகுதிகளில் இவ்வாறான பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான வகுப்புக்கள் ஆரம்பம்

சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான வகுப்புக்கள் ஆரம்பம்

சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான

வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள இன்று முதல்

வழமைபோன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை கற்றல் கற்பித்தல்

செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை தரம்

1 முதல் தரம் 5 வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மலையக தோட்டங்களில் மது உற்பத்தி – கண்டு கொள்ளாத காவல்துறை photo

மலையக தோட்டங்களில் மது உற்பத்தி – கண்டு கொள்ளாத காவல்துறை photo

மலையகத்தில் மது விற்பனை மது உற்பத்தி கொரோனோ நோய் பரவலின் பின்னர் அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக மதுபானசலைகள் மூடியிருந்த வேலையில் சுயமான

மது உற்பத்திகள் தோட்டங்கள் தோரும் முன்னெடுக்கபட்டன. இதன் பிரதிபளிப்பாக தொடர்ந்தும் சட்டவிரோத மதுபான தயாரிப்புகள் தோட்டங்கள் தோரும் முன்னெடுக்கபட்டு வருகின்றன. இதனால்

சமூக பின்னடைவும் சமூக நோய்களும் மலையகத்தில் உறுவாக வாய்ப்புகள் உள்ளது.  இதனை கண்டறிந்து தடை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த மது உற்பத்திகளுக்கு தோட்டங்கள் தோரும் ஒவ்வொறு பெயர்களும் உள்ளன முன்னர் போன்று கசிப்பு கள் சாராயம் என்று கூறுவதில்லை புனைப் பெயர்களே அதிகம். அந்த வகையில்

அன்மை காலம் முதல் டொப்பு என்ற பெயரில் தயாரிக்கபட்ட சட்ட விரோத மது உற்பத்தியே இது. இந்த உற்பத்திகள் பொலித்தீன் பைகளில் நிரப்பபட்டு வினியோகிக்கப்படுகின்றது. இதற்கான

மூலப்பொருட்களாக பழங்கள் குறிப்பாக அன்னாசி பழம் பப்பாசி பழம் சீனி ஈஸ்ட் உட்பட பல வெறியும் சுவையும் வர கூடிய

பொருட்கள் போடபட்டு மிக நீண்ட நேரம் பதப்படுத்தபட்டு வினியோகிக்கப்படுகின்றன. இது  உடம்புக்கு கேடு விளைவிக்க கூடியது. இதனுடன் மேலும் கிதுள் கள்ளும் உற்பத்தி

செய்யப்படுகின்றது. இதற்கு மூலப்பொருட்களாக கிதுள் பானி சீனி ஈஸ்ட் உட்பட பல வெறியும் சுவையும் வர கூடிய பொருட்கள்

போடபட்டு மிக நீண்ட நேரம் பதப்படுத்தபட்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.  

பொதுவாக தோட்டங்களில் மது உற்பத்திக்கு மதுவரி அதிகாரிகளினதும் பொலிஸாரின்; ஒத்துழைப்பும் அவர்களின் முறையற்ற செயற்பாடுகளும் காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில் மக்களை குறை கூறுவதில் நியாயம் இல்லை.   இவர்கள் தோட்ட புரங்களில் காணப்படும் சட்டவிரோத மினி பார்கள் அழிக்க நடவடிக்கை எடுக்காமையும்¸ காவல் துறையினர்

 ஒத்துழைப்பு வழங்குகின்றமையும்¸ சட்டவிரோத மது உற்பத்தியாளர்களுக்கு சட்டத்தின் மூலம்  முறையான தண்டனை வழங்காமையும் ஒரே  பிரதேசத்தில்; அளவுக்கு அதிகமாக பார்களை

நடாத்த அனுமதி வழங்கியமையும் தோட்ட தொழிலாளர்களின் மது பாவனை அதிகரிக்க காரணமாக இருந்து வருகின்றது. மலையக தோட்ட புறங்களில் சட்ட விரோத மது உற்பத்திகளையும் மது

பாவனையையும் இல்லாதொழிக்க வேண்டுமானால் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். அதன் பலயீனம் பெருந்தோட்ட மக்களை பாதிப்படைய செய்கின்றது.

தற்போது சில தோட்டக்குடியிருப்புகள் தோரும் சட்டவிரோதமான முறையில் தற்போதும் மதுபானம் விற்கப்படுகின்றது. தோட்டத்தொழிலாளர்களின் தாழ்நிலை வருமானத்தில் குறைந்த

விலையில் நிறைந்த பயணை அடையக் கூடிய மது வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் உடல் நலத்தையும் பாதித்து வருகின்றது. இவ்வாறான சட்ட விரோத மது உற்பத்திகள்

மலையக தோட்ட புறங்களில் மாத்திரம் நடைபெறவில்லை ஆங்காங்கே அனைத்து பிரதேசங்களிளும் நடைபெற்று

வருகின்றது. இதனை இல்லாதொழிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். மது ஒழிப்பிற்கான ஜனாதிபதியின் செயற்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.

    Posted in இலங்கை செய்திகள்

    திருத்தப்படாமல் இருக்கும் டன்சின் தோட்ட பஸ் நிலையம்- கோட்டா அரசின் சாதனை photo

    திருத்தப்படாமல் இருக்கும்
    டன்சின் தோட்ட பஸ் நிலையம்- கோட்டா அரசின் சாதனை photo

    நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்தில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும்

    பிரதான பாதையில் டன்சினன் தோட்டத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது. இந்த பஸ் நிலையத்தை டன்சினன் தோட்டம்

    விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும்; தோட்ட மக்களும் நாளாந்தம் பாவித்து வருகின்றனர்.

    தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் பாதிக்கபட்ட நிலையில் சுற்றுபுரங்களும் கும்பைளினால்

    மூடப்பட்டு காணப்படுகின்றது. இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும் இது

    வரைக்கும் திருத்தி அமைக்கப்படவில்லை. குறிப்பாக பூண்டுலோயா நகரத்தில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் இந்த பிரதான பாதையின் அதிகளவிலான பகுதிகள் பாதிக்கபட்டு

    குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையமும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது

    வேதனைக்குறியது. மழை காலங்களில் எந்த ஒரு பயணியும் இந்த பஸ் நிலையத்திற் நிற்க கூட முடியாது.

    இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண

    போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப் பிரதேச பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      150 வருடங்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் இந்த மக்கள் photo

      150 வருடங்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் இந்த மக்கள் photo

      4 தலைமுறைகளாக 150 வருடங்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழும்
      இந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வு எப்போது

      எழில் கொஞ்சும் மலையகத்தின் நுவரெலியா நகரம் குட்டி லண்டன் என அழைக்கப்டும் நகரமாகும் இங்கு அனைத்து விடயங்களும் அழகாக காணப்பட்ட போதும். நகரத்தின் மத்தியில் காணப்படும்

      குதிரை பந்தய திடலில் வாழ்ந்து வரும் மக்கள்; தற்போது பல்வேறுப்பட்ட அடிப்படை வகதிகள் இன்றி தொடர்ந்து 4

      தலைமுறைகளாக 150 வருடங்களுக்கு மேல் அடிப்படை வசதிகள் இன்றி பாதிப்புக்கு உள்ளளாகியுள்ளனர். தற்போதும் 55 தற்காலிக

      வீடுகளில சிறுவர்கள் முதியோர்கள் உட்பட 300 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

      இந் நிலமை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த குதிரை பந்தய திடல் அமைக்கபட்டது. அப்போது அங்கு வேலை செய்வதற்தும் குதிரைகளை

      பராமறிப்பதற்கும் இவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இதன் நிர்வாகம் ஆங்கிலேயரினாலும் பின்னர் நுவரெலியா நகர சபையும்

      2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் விiயாட்டுத்துறை அமைச்சும் நடாத்தி வருகின்றது.
      இந்த காலப்பகுதியில் மேற்டி மக்களின் அடிப்படை தேவைகளை எவரும் பூர்த்தி செய்யாத நிலையில் பல்வேறுப்பட்ட

      பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் தற்போதும் தற்காலிக இறப்பர் சீட் மூலம் வேயப்பட்ட வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு முறையான நீர்¸ மலசலகூடம்¸

      மின்சாரம்¸ போக்குவரத்து¸ சுகாதாரம்¸ சிறுவர் பாரமரிப்பு¸ மற்றும் வசதிகள் இன்றியும் பல சமூகப்பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

      தற்போது இருக்கின்ற வீட்டை கூட திருத்தி அமைப்பதற்கு விiயாட்டுத்துறை அமைச்சு தடுத்து வந்தது. தங்கள் வீடுகளை எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்ய முடியாது.

      அதனை பார்வையிடுவதற்கு அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளையும் மருத்து வருகின்றது. மழைக் காலங்களில் வெள்ளத்தினாலும்

      பாதிப்படைந்தனர் இந் நிலையில் சம்பந்தப்ட்ட அதிகாரிகள் தங்களுக்கு முறையான தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கைளை முன் வைக்கின்றனர்.

      இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஸ்ணன் கவனத்திற்கும் அப்போது கொண்டு வந்தனர்.

      அதன் பயனாக விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்ததை நடாத்தி வேறு இடத்தில் 46 புதிய வீடுகள் கட்ட தீர்மானித்து இந்த மக்களின் பிரச்சனைக்கு

      தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்றான நடவடிக்கை எடுக்கபட்ட போதும் இது வரைக்கும் நடைமுறைப்படுத்தவில்லை இந்த திட்டம் தொடர்பான வரை படங்கள் கூட வெளியாகின. அதிகாரிகளும்

      நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றனர். இவ்வாறான நிலையில் இந்த செயற்திட்;டம் முறையாக நடைமுறைப்படுத்தாமை வேதனைக்குறியதுடன்; இதனை உடனடியா

      நடைமுறைப்படுத்துமாறு மக்கள் கோரி;க்கைவிடுக்கின்றனர். பாதிப்புக்கு உள்ளான மக்கள் தங்களுக்கு புதிய வீட்டுத்திட்டம் வருகின்றது என்று ஆசையுடன் இருக்கும் வேலையில் மேலும் ஒரு

      புதிய ஏமாற்றம் வந்துள்ளது. அதுதான் இவர்கள் வாழும் இடத்திற்கு அருகிலேயே விளையாட்டுத்துறைக்கான உல்லாச விடுதி அமைக்கும் செயற்திட்டம். தற்போது இந்த செயற்திட்டத்திற்கு பல

      மில்லியன் ரூபா செலவு செய்து இந்த விடுதி அமைக்கபட்டு வருகின்றது. பாதிக்கபட்ட மக்கள் அந்த விடுதியை பார்த்து கவலை அடைந்தும் வருகின்றனர்.


      இருக்க விடு இல்லை வீடு ஒழுகின்றது வெள்ளத்தால் பாதிப்பு சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பாதிப்பு பல சமூக

      சீர்கேடுகள் கண் முன்னனே நடைபெற்றறுக் கொண்டு இருக்கும் இவ்வேலையில் இவர்களுக்கு வீடு அமைப்பதற்கு பதிலாக விளையாட்டுதுறை அமைச்சு உல்லாச விடுதி அமைப்பது வேதனைக்குறியதே.

      04 தலைமுறைகளாக இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வினை சம்பந்தபட்டவர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த மக்கள் 05 ஜனாதிபதிகளையும் பல அரசியல் பிரமுகர்களையும்

      உறுவாக்குவதற்கு காரணமாக இருந்துள்ளனர். சிலர் இங்கையே பிறந்து வாழ்ந்து இறந்தும் உள்ளனர்.

      இந்த பிரதேசத்தில் வாழும் மக்ககளின் பிள்ளைகளுக்கு குறித்த வீடுகளில் இருந்து கல்வி கற்க முடியாத நிலையும் தோன்றி உள்ளது.

      இளைஞர் யுவதிகள் வேறு இடங்களுக்கு சென்றால் தாங்கள் இருக்கும் இடத்தை கூட யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பிரதேசத்தின் அவல நிலை.

        Posted in இலங்கை செய்திகள்

        புலிகளின்குரல் வானொலி மீது சிறிலங்கா அரசின் நடவடிக்கை.

        புலிகளின்குரல் வானொலி மீது சிறிலங்கா அரசின் நடவடிக்கை.

        தேசத்தின் வாசத்தை சுவாசித்து வாழும் உங்களுக்கு , புலிகளின்குரல் நிறுவனத்தின் புரட்சிகர வணக்கங்கள்.


        தாயகத்தில் 2009ம் ஆண்டுவரை பண்பலையில் ஒலித்து வந்த புலிகளின்குரல் வானொலி, எமது ஆயுத மௌனிப்புக்கு பின்னர், 2009ம் ஆண்டு யூலை – 05, கரும்புலிகள் நாள் முதல் இணையத்தில்

        மீண்டும் ஒலிக்கத்தொடங்கியதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.
        இந்த 11 ஆண்டுகளாக எமது இணையத்தளத்தில் ஒலித்து வந்த

        புலிகளின்குரல் வானொலியை, தற்போது ஆட்சியில் உள்ள சிறிலங்கா அரசானது தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நிறுத்துவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளது.


        சிறிலங்கா அரசின் இச் செயற்பாட்டிற்கு இந்த உலகமும் ஒத்துழைக்கின்றது. எமது இணையத்தளத்திற்கு சேர்வர் வழங்கும்

        நிறுவனம், மற்றும் Google play store , Apple Store நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசானது ஒரு உத்தியோகபூர்வ கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது.


        அதில் எமது வானொலிக்கான சேவையை நிறுத்துமாறும், இது விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ

        வானொலியெனவும்,இவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டு, அக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்கள்.


        எமது வானொலிக்கு இணையத்தள சேர்வரினை வழங்கிய நிறுவனத்தினர், தங்களோடு இணைந்து எமது வானொலியை

        தொடர்ந்தும் செயற்படுத்த முடியாது என கூறியதற்கு அமைய, எமது இணையத்தளம் வேறு சேர்வர் நிறுவனத்தோடு இணைந்து

        தற்போது மீண்டும் இயங்குகின்றது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.


        ஆனால் Google play store மற்றும் Apple Store நிறுவனங்கள் சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, எமது வானொலிக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு, சேவையில்

        இருந்த செல்லிடப்பேசிகளின் மென் பொருட்கள் (Apps) மற்றும் முகப்புத்தகம் போன்றவற்றை, பாவனையில் இருந்து

        நிறுத்தியுள்ளது என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
        எனவே, வெகு விரைவில் எதோ ஒரு வழியில், எமது

        வானொலிக்குரிய மென்பொருட்கள் இணைக்கப்படும் என்பதனை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.


        எத்தனையோ தடைகளை சந்தித்த எமது வானொலி, இத் தடையையும் கடந்து, தொடர்ந்து தேசத்தின் வாசம் சுமந்து

        தேசியத்தலைவரின் எண்ணக்குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

        புலிகளின்குரல் நிறுவனம்
        26.08.2020
        www.pulikalinkural.com

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை வந்த ரசியாவின் 3 போர் கப்பல்

          இலங்கை வந்த ரசியாவின் 3 போர் கப்பல்

          ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் 3 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

          அட்மிரல் ட்ரிபக், அட்மிரல் வினோகிராதொவ், பொரிஸ் புட்டோமா

          ஆகிய 3 கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

          விநியோக ​தேவைகள் மற்றும் அலுவலக பணியாளர்களின் ஓய்வுக்காக

          இக்கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன்,

          சுகாதார ஆலோசனைகள் மற்றும் முறைகளுக்கமைய இக் கப்பலுடனான தொடர்புகள் பேணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          அத்துடன் இந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                வெளிநாட்டு விமானத்தில் வந்த பலருக்கு கொரோனா

                வெளிநாட்டு விமானத்தில் வந்த பலருக்கு கொரோனா

                கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்டி​ருந்த 22 பேருக்கு, நேற்று (31) கொரோனா தொற்று உறுதி

                செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

                அத்துடன் நேற்றைய தினம் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவ்வாறு உறுதி

                செய்யப்பட்டவர்களும் கட்டாரிலிருந்து வருகைத் தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                இதேவேளை, கடந்த வாரம் கட்டாரிலிருந்து 398 பேர் ஒ​ரே விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாகவும் இவ்வாறு வந்த 54

                பேருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2,868 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு

                வெளியேறியுள்ளதுடன், 191பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    444 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

                    444 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்

                    விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

                    இதில் 18 பெண்களும் உள்ளடங்குவதாகவும், சிறைச்சாலைகளில்

                    இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப் பட்டியல் விசாரணைக்கு

                    உட்படுத்தப்பட்ட பின்னர், கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை

                    எடுத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார

                    உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                    சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியை கவனத்தில்

                    கொண்டு சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில்

                    வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுதலை

                    செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம்

                      குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம்

                      வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02இல் ஆரம்பம்

                      தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.

                      வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பம்.

                      அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி

                      பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

                      • கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு.
                      • எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயற்சி பெறாதவர்களும்.


                      • விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 ஐ விட அதிகமாகவும் இருக்காமை.


                      • சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல்.


                      • வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பினராக இருத்தல்.
                      • விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தை கொண்டவர்.

                       பயிற்சிக்காக தெரிவு செய்தல்.
                      • ஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும்.
                      • விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற

                      தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.


                      • தாம் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும்.
                      • சிறப்பான பயற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும்.

                       சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
                      • 6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த

                      பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத

                      சம்பளம் (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.

                      10 வருடகால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும்.

                      குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு

                      , தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      கோட்டாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி திடீர் பேச்சு

                      கோட்டாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி திடீர் பேச்சு

                      அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் வு. எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

                      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது Twitter பகத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

                      இந்த தொலைபேசி உரையாடலின்போது கொரோனாத் தொற்றை வெற்றிகரமாக

                      கையாண்டமை மற்றும் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு அவர்

                      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவிததுள்ளார்.

                      இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் ,

                      பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இந்து சமூத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்

                      20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்

                      20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

                      ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று ,டம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் ,துபற்றி

                      தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

                      ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் ,ரண்டு

                      பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளிலும்

                      அதிகாரத்தை கைப்பற்றி பெரமுனவை அனைத்து மக்களுக்குமான கட்சியாக மாற்றுவது கட்சியின் ,லக்காகும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      தமிழின கொலையாளி மரணம் – மகிழ்ச்சியில் தமிழர்கள்

                      தமிழின கொலையாளி மரணம் – மகிழ்ச்சியில் தமிழர்கள்

                      முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக

                      அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார்.

                      அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

                      இன்று காலை ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக

                      உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக,

                      மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.

                      இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

                      இவர் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தை முன் நின்று நடத்தியவர் ,இவரது மரணம் ஈழ தமிழர்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      ரணில் மீது விசாரணை – கோட்டா அரசு அதிரடி நகர்வு

                      ரணில் மீது விசாரணை – கோட்டா அரசு அதிரடி நகர்வு

                      2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் பிரதமர்

                      ரணில் விக்கிரமசிங்க, இன்று (31) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

                      ஆஜராகியுள்ளாரென அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

                      ஜனாதிபதி விசாரணை ஆ​ணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, இந்த மாதம் 21ஆம் திகதி முன்னாள்

                      பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருந்த போதும், அன்றைய தினம் தன்னால் வரமுடியாது என்றும், இன்றே தன்னால்

                      ஆஜராக முடியுமென ரணில் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில்

                      கலந்து​கொண்டிருந்தமை தொடர்பாக வாக்குமூலமளிக்கவே இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் வாகனங்கள், விலை திடீரென அதிகரிப்பு

                      இலங்கையில் வாகனங்கள், விலை திடீரென அதிகரிப்பு

                      இலங்கையில் வாகனகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டு பட்டால் தற்போது

                      இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை அதிகரிக்க பட்டுள்ளது

                      வாகன இறக்குமதியை அரசு குறைத்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      லெபனான் குண்டு வெடிப்பு 24 இலங்கையர்கள் பாதிப்பு

                      லெபனான் குண்டு வெடிப்பு 24 இலங்கையர்கள் பாதிப்பு

                      லெபனானில் இடம்பெற்ற கூட்னு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி

                      இருபத்தி நான்கு இலங்கையர்கள் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

                      காயமடைந்த அனைவரையும் இலங்கைக்கு அழைத்து வரும்

                      நடவடிகை தீவிர படுத்த பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்க படுகிறது