Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இதுவரை அக்ரஹார காப்புறுதி பலன்களைப் பெறாத அரச ஊழியர்களுக்கு அதற்கான வசதி
இதுவரை அக்ரஹார காப்புறுதி பலன்களைப் பெறாத அரச ஊழியர்களுக்கு அதற்கான வசதி
அக்ரஹார காப்புறுதி பயன்களை இதுவரையில் கொண்டிராத ஓய்வு பெற்ற 600,000 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி பயன்களை வழங்குவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு அமைவாக நேற்யை தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் இதற்கான பரிந்துரையை முன்வைத்தார். அமைச்சரவையினால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு:
03.ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அக்ரஹார காப்புறுதி பரிந்துரையின் கீழான நன்மைகளை மேலும் விரிவுபடுத்துதல்
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியக்காரர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறைக்கு உள்ளடக்கப்படக்கூடிய
நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஓய்வூதியக்காரர்களில் பெரும்பாலானோர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க
சேவையில் ஓய்வுபெற்றவர்களாக இருப்பதினால் அவர்களையும் அக்ரஹார காப்புறுதி முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வசதிகள் செய்யுமாறு ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்பொழுது 2016 ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரம் உரித்தாகியுள்ள அக்ரஹார பயன்கள் அந்த தினத்திற்கு
முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் திறனாற்றல் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினாலும் அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பரிந்துரை
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் வழங்கப்பட்ட உடன்பாட்டை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. இதேபோன்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை கவனத்தில்
கொண்டு கீழ் கண்ட வகையில் செயல்ப்படுவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• அக்ரகார காப்புறுதி பரிந்துரை முறையின் கீழ் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் நன்மைகளைப்
பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தரமான சிறப்பான சுகாதார சேவை வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசாங்கத்தின் அனைத்து முக்கிய வைத்தியசாலைகளில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்ட் தொகுதி ஒன்றை
முன்னெடுப்பதற்காக பொருத்தமான முறையொன்றை வகுத்தல்
• அரச சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியகாரர்களுக்கு மத்தியில் ஓய்வூதிய சம்பள முரண்பாடு மேலும் நீடிப்பது அவதானிக்கப்படுவதுடன் இந்த முரண்பாடுகளை சரி செய்வதற்காக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறு தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் கோருகின்றோம்.a
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் விடுவிப்பு
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் விடுவிப்பு
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில்
தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 126 பேர் வௌியேறியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று வரை 25,316 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், நாட்டில் அமைந்துள்ள 47 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,984 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை
நாட்டில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (23ஆம் திகதி) மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குமுதல் தெற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து
நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து
வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி
நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றார். சக கைதியுடன் ஏற்பட்ட
வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் நளினியின், தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினார். அதில் கொலை வழக்கு தொடர்பாக சிறையில்
உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு
மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் நளினிக்கு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட
சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சக கைதி, வார்டனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் பெறும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் – பிரதமர்
வங்கிகளில் கடன் பெறும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் – பிரதமர்
வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (2020.07.21) காலை கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேசங்கள் சிலவற்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உடுதும்பரயில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதமர் கருத்து வெளியிடுகையில், வங்கிகளில் கடன் பெற செல்லும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் வகையில் விண்ணப்பங்கள் நிரப்புவதற்கு உள்ள முறையை எதிர்வரும் காலங்களில் மாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டில் முப்பது வருடங்கள் காணப்பட்ட சிவில் யுத்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். அதன் பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டின் அனைத்து மாகாணத்திற்கும் ஒரே முறையில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம். அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாடசாலைகள் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் ஒரே சம அளவிலான அபிவிருத்திகளை நாடு முழுவதும் மேற்கொண்டோம்.
2015ஆம் ஆண்டின் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் அந்த அபிவிருத்திகளை பின்நோக்கி கொண்டு சென்றது. கண்டிக்கு வரும் அதிவேக நெடுஞ்சாலையும் எங்கள் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் கண்டியை மறந்துவிட்டது. எங்கள் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான பகுதிகளில் இதுவரையில் வேலைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றது. வௌ;வேறு உறுப்பினர்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளின் பகுதிகளை வழங்குவதே தாமதத்திற்கு காரணமாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் வெகு விரைவில் கண்டி வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.
கடந்த அரசாங்கம் வேலை செய்வதனை நிறுத்தி விட்டு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனைவரையும் பழிவாங்கினார்கள். ஆணைக்குழுக்களை அமைத்தார்கள். குற்றச்சாட்டுகள் இன்றி எங்கள் பிள்ளைகளை சிறையில் அடைத்தார்கள். எங்கள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், உதவிய வர்த்தகர்கள் என அனைவரையும் நிதி குற்ற விசாரணை பிரிவு என விசேட விசாரணை பிரிவை அமைத்து சிறையில் அடைத்தார்கள். அதற்கு பிரதமரால் மாத்திரமே முறைப்பாடு செய்ய முடியும். அந்த முறையில் சட்டத்தை உடைத்தார்கள். சட்டத்தை உடைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதன் பின்னர் அந்த அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த மோதலினால் ஜனாதிபதி என்னை அழைத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறினார். நான் அதனை ஏற்றேன். அந்த காலப்பகுதியில் சிறிய காலப்பகுதி ஒன்றுக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்பது எனக்கு தெரியும். அன்று நாங்கள் எதிர்கட்சியில் இருந்த போது எங்கள் குழுவில் ஐம்பத்து இரண்டு பேர் இருந்த போதிலும் எங்களுக்கு எதிர்கட்சி தலைமைத்துவம் வழங்கப்படவில்லை. 16 ஆசனங்கள் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. எதிர்கட்சியின் பிரதான கொறடா பதவி மக்கள் விடுதலை முன்னணிக்கும் வழங்கப்பட்டது. அது தான் அன்று நாடாளுமன்றம் செயற்பட்ட முறையாகும். அந்த விடயங்களை மேற்கொள்வதற்கு சபாநாயகர் புதிய சட்டத்திட்டங்களை கொண்டு வந்தார். இறுதியாக பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டு மீண்டும் எதிர்கட்சிக்கு செல்லும் போது எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்ற முடிந்தது. அதன் பின்னரே புதிய கட்சி ஒன்றில் பிரதேச சபை தேர்தில் போட்டியிட்டு அந்த தேர்தலில் வெற்றி பெற்றோம். எங்கள் கட்சிக்கு மூன்றாயிரம் கணக்கிலான உறுப்பினர்கள் உள்ளனர். பிரதேச சபை தேர்தலில் 71மூ ஆசனங்களை எங்களால் வெற்றியீட்ட முடிந்தது. ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் தாமரை மொட்டியில் போட்டியிட்டு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்றார்.
பிரதமர் மற்றும் ஜனாதிபதி இரண்டு கட்சிகளில் இருக்கும் போது நாட்டிற்கு சேவைகள் ஒன்றும் நிறைவேற்றப்படாதென்பதனை நாங்கள் பார்த்தோம். அந்த தரப்பினர் சண்டையிடுவதனை மாத்திரமே செய்தார்கள். அதனால் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிக்கு நிச்சயமாக பிரதமர் பதவியும் நாடாளுமன்றமும் காணப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு ஒன்றில் அபிவிருத்திகள் ஏற்படாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் எங்கள் ஜனாதிபதியின் கொள்கை வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடியவர்களை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை செய்வதற்காக இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள எங்கள் குழுவினர், கிராமங்கள் குறித்து, பிரதேசங்கள் குறித்து, நாடு குறித்து மாத்திரமின்றி, சர்வதேச அரசியல் தொடர்பிலும் சிறந்த விழிப்புணர்வு கொண்டவர்களாகும். ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க அவர்களும், டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பினார்கள். அவர்களை தொடர்ந்து சந்திரிக்கா அவர்கள் போன்று நாங்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னோக்கி கொண்டு வந்தோம். பின்னர் எங்களை கட்சியில் இருந்து விலக்கியமையினால் எங்களுக்கு வேறு கட்சியை உருவாக்க நேரிட்டது. நாங்கள் மொட்டினை உருவாக்கி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
பெண்கள்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் அவசியமாகும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு விசேட கடன் முறையை அமைப்பது அவசியமாகும். இன்று கடன் பெற சென்றால் வங்கிகளில் வழங்கும் விண்ணப்பங்களை பார்க்கும் போதே பயம் ஏற்படுகின்றது. வங்கிகளில் கடன் வழங்கும் முறை மாற்றமடைய வேண்டும். அதனை நாங்கள் தினமும் கூறுகின்றோம். வங்கிகளில் கடன் பெற்று ஏதாவது தொழிற்சாலையை ஆரம்பிக்க கூடிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அதனால் வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆலோசனை கிடைக்க வேண்டும். இலகு முறை ஒன்றை பின்பற்ற வேண்டும். பெண்களுக்காக விசேட வேலைதிட்டம் ஒன்றையும் கடன் பணம் வழங்கி சுய தொழில் தொழிற்சாலை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த விடயத்திற்கமைய அவர்களின் வாழ்க்கையை வெற்றிகராக மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று தொழில் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்போம்.இதற்கு முன்னர் நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் அரச தொழிலில் ஏழு லட்சம் பேர் வரையிலானோரே இருந்தனர்.
நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது 15 லட்சம் பேர் வரையில் இருந்தனர். நாங்கள் ஒரே நேரத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கினோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தொழில் வழங்குவதாக கூறினார். கூறியதனை போன்றே நாங்கள் தொழில் வழங்கினோர். எனினும் தேர்தல் சட்டத்திற்கமைய அவர்களுக்கு தற்காலிகமாக வீட்டில் இருக்க நேரிட்டுள்ளது. தொழிலை ஏற்றவர்களுக்கு சம்பளமும் கிடைக்கின்றது.
ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டமும் அதே போன்ற வேலைத்திட்டமாகும். முதல் முறையாக ஒரு பேனையில் ஒரு லட்சம் தொழில் வழங்கப்படுகின்றது. பொதுவாக ஆறு வேலைகளாவது செய்திருந்தால் தான் அரசாங்க தொழில் கிடைக்கும். முதல் முறையாக பரீட்சையில் தோல்வியடைந்தவர்களை பார்த்து தொழில் வழங்கப்படுகின்றது.
நாங்கள் மூன்றில் இரண்டு அதிகாரம் கேட்கின்றோம். ஏன் மூன்றில் இரண்டு கேட்கின்றோம். அரசியலமைப்பை மாற்ற வேண்டும் நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு ஒன்று வேண்டும். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்கும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் கண்டி, தெல்தெனிய நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர், தந்தையின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரம் கோரும் சஜித் பிரேமதாஸவின் தந்தையின் ஆட்சி யுகம் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்,
சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை தொகுப்புகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை தொகுப்புகளுக்கும் இடையில் ஒற்றுமை ஒன்று உள்ளது. இலங்கை மிக பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்ட சஜித் பிரேமதாஸ, நாட்டை பிளவுப்படுத்துவதற்கும் ஒரு போதும் தயங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.
சஜித் பிரேமதாஸ அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது தந்தையின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கே அதிகாரத்தை கேட்கின்றார். ஆர்.பிரேமதாஸ காலம் தொடர்பில் நினைவுப்படுத்தினால் 88, 89 காலப்பகுதியில் காணப்பட்ட கலவர யுகமே எந்த ஒரு நபருக்கும் நினைவுக்கு வரும். பிரேமதாஸ யுகத்தின் கலவரம் காரணமாக கண்டியின் சில கிராமங்கள் படுகொலைகளுக்குட்பட்டது. நாய் – பூனையேனும் மீதம் வைக்கவில்லை. அந்த கலவரங்கள் தொடர்பில் இந்த பிரதேச மக்கள் என்ற ரீதியில் உங்களுக்கு புதிதாக ஒன்றும் கூற தேவையில்லை. அந்த கலவரத்தினால் முழு நாட்டிலும் 60 ஆயிரத்திற்கும் அதிக இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டனர்.
1988ஆம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் மாத்திரம் 22 பேர் கொல்லப்பட்டனர். கண்டி மஹவத்தை படுகொலை சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 157 ஆகும். அதில் 129 கொலை பிரேமதாஸ அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது. 28 பேரை மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறையாளர்கள் கொலை செய்தனர். 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரேமதாஸ அரசாங்கம், கண்டி டீ.எஸ்.சேனாநாயக்க மாவத்தையில் மேல் பகுதிக்கு செல்லும் பழைய மாத்தளை வீதியில் இளைஞர், யுவதிகள் பலர் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
பிரேமதாஸ யுகத்தில் கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ, ரன்தெனிகல, கண்டி, சில்வெஸ்டர் வித்தியாலயம், அஸ்கிரி பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லங்கள், அங்கும்புர குண்டசாலை, கட்டுகஸ்தோட்டை தெல்வத்தை சித்திரவதை கூடங்கள் உட்பட பல பாரிய எண்ணிக்கையிலான சித்திரவதை கூடங்கள் இருந்தமை எங்களுகக்கு நினைவில் உள்ளது.
இடைக்கிடையே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பேராதனை பாளத்தில் இருந்து மகாவெலி கங்கைக்கு இழுத்து வீசப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகம். கடுகன்னாவ நகரத்தில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட 14 – 15 வயதுடைய சிறுமிகளின் சாம்பல்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று அது தொடர்பில் முழு உலகினதும் அவதானம் செலுத்தப்பட்டது. அன்று காணப்பட்ட அரசாங்கம் அந்த சாம்பல்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதென தேடிய போதிலும் அந்த சிறுமிகளை யார் கொலை செய்தார்கள் என தேடவில்லை. இதனால் இன்று மீண்டும் பிரேமதாஸ யுகம் ஒன்று ஏற்படுத்த மக்கள் அச்சப்படுகின்றார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தை, ஆனந்த அழுத்கமகே உட்பட இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இணைந்திருந்தனர்.
புதிய கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்
புதிய கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்
ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட 24 ஆவது கடற்படைத் தளபதியான வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்ன நேற்று (21) விஜயத்தை
மேற்கொண்டு கொவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்தார்.
இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை தலைமையக நுழைவாயிலில் வைத்து இராணுவ
தலைமையகத்தின் பட்டாலியன் தலைமையக கட்டளை அதிகாரியான கேர்ணல் இந்திக பெரேரா வரவேற்றார்.
பின்பு இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர்
ஜெனரல் சூல அபேநாயக வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ பீரங்கிப் படையணியினரால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்னர் இராணுவ தளபதியின் பணிமனைக்கு சென்ற கடற்படைத் தளபதியை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல்
சவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்று பின்னர் இராணுவ தலைமையகத்திலுள்ள மூத்த உயரதிகாரிகளை கடற்படைத் தளபதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் கடற்படைத் தளபதி மற்றும் இராணுவ தளபதி இருவருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன்
கலந்துரையாடல்கள் இடம்பெற்று இருவருக்கும் இடையில் இந்த சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
இறுதியில் கடற்படைத் தளபதியினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு
தனக்கு கௌரவ மரியாதையை வழங்கி வைத்த இராணுவ தளபதி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி 24 ஆவது புதிய கடற்படைத் தளபதியாக வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்ன நியமிக்கப்பட்டார்.
புதிய கடற்படைத் தளபதி 1985 ஆம் ஆண்டு 13 ஆவது பயிற்சிகெடெற் அதிகாரியாக இணைந்து திருகோணமலை கடற்படை முகாமில் அடிப்படை பயிற்சியினை பெற்றுக்
கொண்டார். இந்த பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்பு, அவர் 1987 ஆம் ஆண்டு ஜனவாரி 07 ஆம் திகதியாக இரண்டாவது லெப்டினனாக நியமிக்கப்பட்டார். பின்னர்
இவர் அடுத்தடுத்த தரவரிசைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி ரியர் அத்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
கடற்படைத் தளபதி கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டு சிறந்த பண்புகளையும் திறமைகளையும்
கொண்டு றோயல் கல்லூரிக்கு பெருமையை தேடித்தந்தவர். இவர் இருமுறை ஹேர்மன் லூஷ் கோப்பையை வென்று சிறந்த கெடற்
அதிகாரியாக கல்லூரியில் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

மரக்கறிகளுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம்
மரக்கறிகளுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம்
மரக்கறி விவசாயிகளுக்கு பாதுகாப்பானதொரு எதிர்காலம் உருவாகும் வகையில் தமது அறுவடைகளுக்கு உரிய விலையை
பெற்றுக்கொள்ளக்கூடிய முறைமை ஒன்றை தயாரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மரக்கறிகள், பழவகைகள் மற்றும் ஏனைய பயிர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (21)
நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, வலப்பனை நகரில் சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் நிமல் பியதிஸ்ஸ ஆகியோரினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரச வங்கிக் கடன்கள் தங்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தரும் வகையில் இல்லையென விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு
நியமனங்களை பெற்று வருவோர் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்று வேறு மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். அதன் காரணமாக பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து, அதனை பாடசாலையுடன் இணைத்து பாலம் ஒன்றிணை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த
கோரிக்கையினை ஜனாதிபதி இராணுவ தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். நாளைய தினமே அது பற்றி ஆராய்ந்து விரைவாக அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை
எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். பிரதேச மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ரிக்கில்லகஸ்கட பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில்
பங்குபற்றிய ஜனாதிபதிக்கு மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.
வலப்பனை வைத்தியசாலைக்கு பிக்குகளுக்கான வாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணித்து தருமாறு மகாசங்கத்தினர்
முன்வைத்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அபேட்சகர் சதாசிவம் சுப்பையா கந்தப்பளை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி
பங்குபற்றினார். வருகை தந்திருந்த பிரதேசவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி சமயக் கிரியைகளும் இடம்பெற்றன.
தரம் வாய்ந்த விதை கிழங்குகள் பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
கந்தப்பளையிலிருந்து நுவரெலியா வரையில் வீதியின் இருபுறமும் ஒன்றுகூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி சுமூகமாக உரையாடினார்.
இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றாடலை பாதுகாக்குமாறு நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சுயதொழிலாக பெண்கள் சிலர் சேர்ந்து முன்னெடுத்து வரும் “பஜட் பெக்” மரக்கறி மற்றும் பழவகைகள் திட்டம் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழில்
மற்றும் காணி உறுதிகள் இல்லாமையினால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் எஸ்பி.திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது
எல்பிட்டிய, கனேகொட பகுதியில் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் இருந்து போரொ 12 வகை துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் 6, உள்நாட்டு துப்பாக்கி ஒன்று, கைக்குண்டு ஒன்று, ரி56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 23 மற்றும் அதற்கான மெகசின் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக 3 வாள்கள், இராணுவ சீருடை ஒன்று மற்றும் இராணுவ மேலாடைகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே- மகிந்த முழக்கம்
ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே- மகிந்த முழக்கம்
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமான அரச சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்த ஐக்கிய தேசிய
கட்சி அரசாங்கம் பிட்பாக்கட்காரர்களுக்கு சமமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பனை செய்வதற்கே எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
குண்டசாலை, பலகொல்ல பிரதேசத்தில் நேற்று (21) நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் முக்கிய குறிக்கோளாக
காணப்படுவதுடன், அவர்களுக்கு நாட்டை பாதுகாப்பதற்கோ, அபிவிருத்தி செய்வதற்கோ எவ்வித தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
எனவே, மொட்டுடன் இணைந்து நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
யாருடைய தேசதுரோக நிபந்தனைகளுக்கும் அடிபணியாது பலம் வாய்ந்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமாயின் மூன்றில்
இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என்றும், நாட்டிற்காக மொட்டு கட்சியை ஆட்சியில் இருத்துவது மக்களின் கடமை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து இனத்தவர்களுக்கும் வாழக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்த நாடொன்றை உருவாக்கக் கூடிய ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவி
இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவி
சண்டடோரியா 2020´ திட்டத்தின் கீழ் 2020 ஜூன் 01 முதல் ஆகஸ்ட் 15 வரையான காலப்பகுதிக்கு இத்தாலிய அதிகாரிகள் வழங்கியுள்ள பொது மன்னிப்பின் மூலமாக பயன்களை
அடைந்துகொள்வதற்காக இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட்-19 சூழலில் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இலங்கையின் கடவுச்சீட்டுக்காக
விண்ணப்பிக்கும் தொழிலாளர்களிடமிருந்து போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அறவிடப்படும் அபராதக் கட்டணத்தை தள்ளுபடி செய்து, கட்டணங்களை 140 யூரோவாக (330 யூரோ மற்று
ம் 420 யூரோவிலிருந்து) குறைப்பதற்கு அமைச்சர் குணவர்தன நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளார்.
இந்த முயற்சியானது, தற்போது இத்தாலியில் தங்கியுள்ள 20,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கு பயனளிப்பதாக அமைவதுடன்,
அவர்கள் இலங்கையின் கடவுச்சீட்டுக்களைப் பெற்றதன் பின்னர் இத்தாலியில் பணிபுரிவதற்கான வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் -இராதாகிருஷ்ணன்
பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்
இராதாகிருஷ்ணன்
பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தோற்று கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கருத்து
தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று உலகம் பூராவும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவி வருகின்றது. இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக
ஒவ்வொருநாளும்கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப் படுகிறார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களுடைய கடமையில் இருந்து விலகி இருப்பது இந்த தொற்று பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு உகந்த ஒரு விடயமாக நான் கருதவில்லை.
எனவே அரசாங்கம் இவர்களை அழைத்து கலந்துரையாடி இவர்கள் கேட்கும் அந்த அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கி அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்த கொரோனா
தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட முடியுமாக இருந்தால் அதுவே வெற்றியான செயல்பாடாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.
கடந்த காலங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களை
அர்ப்பணித்து இந்த கடமையில் ஈடுபட்டதை நாங்கள் காண முடியும் எனவே அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த
பயணத்தை செல்வோமாக இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
கொரோனா வைரஸ் தொற்று நாடுபூராகவும் 2 ஆயிரத்தி 700 ஐ தாண்டியிருக்கின்ற நிலையில் கொரானா தொற்றினை
உறுதிப்படுத்தும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5 ஆயிரத்தி 546
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம்
அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட 5546 பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் 317 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வாறு
உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பரிசோதனை மாதிரிகள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவையென அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர இப்போதனா வைத்தியசாலையில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்ட நோயாளர்களில் மார்ச் மாதம் 13 ஆந் திகதி தொடக்கம் 31 வரையான காலப்பகுதியில் 31 நோயளர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் மாதத்தில் 79 நோயாளர்களில் 2 பேருக்கும், மே மாதத்தில் 70 நோயாளர்களில் 23 பேருக்கும், ஜூன் மாதத்தில் 16 பேரில் ஒருவருமாக மொத்தம் 32 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 19 நோயாளர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத் திட்டம் அமுலாகும்- மனோ
கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத் திட்டம் அமுலாகும்- மனோ
கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் மத்திய வர்க்கத்தை சார்ந்த அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகிய நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற
குடும்பங்களுக்கு, அவர்கள் இன்று வாடகையாக செலுத்தும் தொகையையே சொந்த வீட்டுக்கான மாத கட்டணமாக மாற்றி அவர்களுக்கு சொந்த மனைகளை வழங்கும் வீட்டுத் திட்டத்தை
சஜித் ஆட்சியில் முன்னெடுப்போம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்குளிய, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, எமது நல்லாட்சியின் போது,
வடகொழும்பில் 13,500 தொடர்மாடி வீட்டுமனைகளை கட்டி பின்தங்கிய குடிசைகளில் இங்கு வாழும் மக்களை புதிதாக குடியமர்த்தினோம்.
இன்னமும் இத்தகைய 10,000 தொடர்மாடி வீட்டு மனைகளுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். கடந்த நான்கு வருடங்களில் வட கொழும்பில் குடிசைகள் வெகுவாக மறைந்து விட்டன. நண்பர்
அமைச்சர் சம்பிக ரணவக்க இந்த அபிவிருத்திக்கு பொறுப்பாக இருந்தார். இந்த வீட்டு திட்டங்களில் பாரபட்சமின்றி குடிசைகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக
குடியேற்றப்பட்டார்கள். பாரபட்சங்கள் நிகழாவண்ணம் நாம் கண்காணித்து கொண்டோம்.
இதற்கு முந்தைய ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இந்த தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் நடந்ததையும், அப்போது அவற்றுக்கு எதிராக நாம் போராடி
அவற்றை தடுத்து நிறுத்தியதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
அதேபோல் மத்திய தர வர்க்க மக்களுக்கான விசேட வீட்டு மனைத்திட்டத்தை முன்னெடுக்கும்படி கோரிகைகளை பலமுறை நான் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்தேன்.
என்னுடன் இணைந்து இதற்காக நண்பர் முஜிபுர் ரஹ்மானும் கோரிக்கை விடுத்தார்.
எனினும் பிரதமர் ரணில் இதை கடைசிவரை தட்டிக்கழித்தே விட்டார். இந்த நடுத்தர வர்க்க மக்களுக்கான வீட்டுத் திட்டம்
நடைமுறையாகும் பட்சத்தில், அது அன்றைய தேசிய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் கீழ் வந்திருக்கும்.
இதுதான் இந்த திட்ட ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணாமா என எனக்கு புரியவில்லை.
எனினும் எமது ஆட்சியின் கீழ் இந்த திட்டம் நடைமுறையாகும். இது கொழும்பில் பெரும்பான்மையாக வாடகை வீடுகளில் வாழும்
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தபால் மூலம் வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
தபால் மூலம் வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதி நாள் இன்றாகும்.
நேற்று (20) வாக்களிக்க தவறிய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இன்றைய தினம் வாக்களிக்க முடியும்.
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை செலுத்த தவறியோருக்கு நேற்றும் (20) இன்றும் (21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சமய ஸ்தலங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என சகல கட்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்மாந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சமய ஸ்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 4,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதில் 3,200 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் 852 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முகாமைத்துவ பிரிவுக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடு ஒன்றில் இருந்து இராணுவ சீருடைகள் மீட்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினர் எனப்படும் ´பெரல் சுனிலுடன்´ நெருங்கிய தொடர்பை பேணிய உதேனி என்ற ´கிரியா´ என்பவர் வலஸ்முல்ல போவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடி படையின் தங்காலை முகாம் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து இராணுவ சீருடைகள் பலவும், கைக் குண்டு ஒன்றும், துப்பாக்கி ரவைகள் சிலவற்றையும் பொலிஸ் விசேட அதிரடி படையின் மீட்டுள்ளனர்.
58 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இராணுவத்தில் இருந்து இடை விலகியவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Recovery of military uniforms from one of the houses
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினர் எனப்படும் ´பெரல் சுனிலுடன்´ நெருங்கிய
தொடர்பை பேணிய உதேனி என்ற ´கிரியா´ என்பவர் வலஸ்முல்ல போவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடி படையின் தங்காலை முகாம் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து இராணுவ சீருடைகள் பலவும், கைக் குண்டு
ஒன்றும், துப்பாக்கி ரவைகள் சிலவற்றையும் பொலிஸ் விசேட அதிரடி படையின் மீட்டுள்ளனர்.
58 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இராணுவத்தில் இருந்து இடை விலகியவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 பொலிஸ் அதிகாரிகள் பேருக்கு இடமாற்றம்
10 பொலிஸ் அதிகாரிகள் பேருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவையின் நிமித்தம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித் த அல்விஸ் ஹட்டன் வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தீவிரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எம்.ஆர் நூறுதீன் பொலிஸ் விசேட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது
ஆறாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது
இலங்கையில் சிக்கியிருந்த 170 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக 2020 ஜூலை 18 ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் ‘வந்தே பாரத் மிஷன்’
திட்டத்தினுடைய நான்காவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்திருந்த
இந்திய பதில் உயர் ஸ்தானிகர் கௌரவ வினோத் கே ஜேக்கப் அவர்கள், அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக
நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா
காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா
திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்த நாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை
வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29, ஜூன் 15, ஜூன் 22 ஜூலை 03 மற்றும் ஜூலை 08 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமான சேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1800 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நாடெங்கும் பலத்த மழை- வெள்ள பெருக்கு அபாயம்
நாடெங்கும் பலத்த மழை- வெள்ள பெருக்கு அபாயம்
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
களுத்துறையிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
கதிர்காமம், உகந்தமலை முருகன் ஆலயங்களின் கொடியேற்ற திருவிழா நாளை
கதிர்காமம், உகந்தமலை முருகன் ஆலயங்களின் கொடியேற்ற திருவிழா நாளை
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா நாளை(21)செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
கொடியேற்றம் இடம்பெற்று 15 நாள் திருவிழாவின் பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் விழா நிறைவடையவுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆலயங்களின் திருவிழா , பக்தர்களின் வருகை என்பன என்பன மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ஆலயங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
உகந்தமலை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இவ்வருட கொடியேற்ற திருவிழா நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
இம்முறை ஆடிவேல் விழா உற்சவம் குறைந்தளவு பக்தர்களுடன் நடாத்த ஆரம்ப குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்னதானம், பாத யாத்திரை என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
பகல் திருவிழா காலை 7மணி முதலும் இரவு திருவிழா மாலை 5மணி முதலும் நடைபெறவுள்ளன. திருவிழா உபயகாரர்கள் 50 பேர் வலை இரவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். திருவிழா காலங்களில் ஏனைய பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதியில்லை.
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை கட்டிட ஆய்வு அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை
ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரையில் ஏற்புடையதாகும்.






