Posted in இலங்கை செய்திகள்

உடபுஸ்ஸலாவ ரப்பான அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா photo

உடபுஸ்ஸலாவ ரப்பான அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா photo

உடபுஸ்ஸலாவ ரப்பான தோட்டம் அருள்மிகு ஸ்ரீ அம்மன் ஆலய கும்பாபிஷேக

விழாவை முன்னிட்டு இன்று (15) நடைப்பெற்ற எண்ணை காப்பு விழாவில்

ம.ம.முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சர் கெளரவ

கலாநிதி வே ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

பெரட்டாசி தோட்ட வைத்தியசாலைக்கு போதிய வைத்தியர் இன்மையால் நோயாளர்கள் பாதிப்பு

பெரட்டாசி தோட்ட வைத்தியசாலைக்கு
போதிய வைத்தியர் இன்மையால்
நோயாளர்கள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ (474A) எல்பொட (474J) போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பெரட்டாசி தோட்டம் ரஸ்புருக் பிரிவுஇ பெரட்டாசி பிரிவுஇ பூச்சிகொட பிரிவுஇ பெரட்டாசி தொழிற்சலை

பிரிவுஇ மேரியல் பிரிவுஇ அயரி பிரிவுஇ எல்பொட வடக்குஇ மேமொழி பிரிவுஇ காச்சாமலை பிரிவுஇ கட்டுக்கித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் பிரிவுஇ கந்தலா தோட்டம் போன்ற

தோட்டங்களில் சுமார் 10.000 க்கு மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்டங்களில் பெரும்பாலானோர் தோட்ட தொழிளாலர்கள்;;. இவர்கள் வேலை தவிர்ந்த மற்றைய நேரங்களில்

விவசாயம் செய்து வருகின்றனா.; இவர்களின் வைத்திய தேவையின் பொருட்டே பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை அமைக்கப்பட்டது.

முன்னால் ஜனாதிபதி திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க ஆட்சிக்காலத்தி; தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்க்ம் பொருப்பேற்கும் திட்டத்தின் கிழ் மலையகத்தில்

காணப்பட்ட வைத்தியசாலைகளான இறம்பொடை – பெரட்டாசி தோட்ட வைத்தியசாலைஇ ஹேவாஹெட்ட -முல்லோயா தோட்ட வைத்தியசாலைஇ கந்தபொலை – ஜபொரஸ்ட் தோட்ட

வைத்தியசாலைஇ கடுகன்சேனை – பார்கேபல் தோட்ட வைத்தியசாலைஇ ஹட்டன்- டிக்N;;காயா வைத்தியசாலை போன்றவை தோட்ட நிர்வாகத்த்pலிருந்து அரசாங்க

வைத்தியசேவைக்கு உள்வாங்கப்பட்டது. இதன்படி இவைகளை திருத்தும் பணிகளும் இதற்கான வளங்களை பெற்றுகொடுப்பதில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுடது. அதன் பயனாக பெரட்டாசி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை

திறக்கப்பட்ட போதும் தற்போதும் மருந்தகமாகவே செயற்பட்டு வருகின்றது. நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெரும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியரும் 03 ஊழியர்களும் 02 காவலாளியுமே காணப்படுகின்றனர். இருக்கும்

வைத்தியர் காலை 8.00 மணிக்கு வந்து மாலை 4.00 மணிக்கு தனது சேவையை முடித்து விடுவார். 4.00 மணிக்கு பிரகு மருந்து எடுக்க முடியாது. வெள்ளிக்கிழமை 12 மணிக்கு வீட்டுக்கு போய் விடுவார்

திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கே மீண்டும் வருவார். சனி ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பூட்டு தான். இந் நிலையில் மேலும் ஒரு வைத்தியர் இந்த வைத்தியசாலைக்கு

தேவைப்படுகின்றது. இதனை பெற்றுக் கொடுக்க சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களோ மாலையில் வேலைகளை முடித்துவிட்டு தான் வைத்தியசாலைக்கு வருவார்கள். அப்போது வைத்தியர் இருக்கமாட்டார். இனி வைத்தியரின் வீட்டுக்கு சென்று பணம்

கொடுத்தே மருந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வைத்தியரும் வேரு வேலைகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றால் அன்று வைத்தியசாலை மூடப்பட்டிருக்கும்.

பல லட்சம் ரூபா செலவு செய்து கட்டப்பட்ட தங்கியிருந்து சிகிச்சை பெறக் கூடிய இந்த வைத்தியசாலை தற்போது மக்களுக்கு முறையான பயன் இன்றி காணப்படுகின்றது. நோயாளிகள்

தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது. கட்டில் போன்றவையும் இல்லை. இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது நோயாளர்கள் தங்கி வைத்தியம் பெருவதற்கே ஆனால் தற்போது அவை

நடைமுறையில் இல்லை. மக்களின் மேலதிக அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. அதுவும் சிக்கலான காரியம் காரணம் 25 கி.மீ

பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த பாதையில் தற்போது குறிபிட்ட தூரம் செப்பனிடப்பட்டு மிகுதியானது திருத்தப்பட்டு வருகின்றது. இப்பாதையில் பஸ் விபத்துக்கள் சுமார் 5 முறை இடம்

பெற்றுறுள்ளது. பலர் இறந்தும் பலர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளர்களையும்இ குழந்தை பெறுவோரர்களையும் பல மைல் தூரம் லொறியில் கொண்டு செல்வதால்; இடையில் இறந்துள்ளனர்.

காரணம் பாதையின் அவலம். குழந்தை கிடைக்க லொறியில் கொண்டு சென்ற தாயிற்கு பாதையிலேயே லொறியில் குழந்தை கிடைத்து குழந்தை இறந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது 9

பிரிவினை கொண்ட தோட்டத்தில் யுஆடீருடுயுNஊநு இல்லை. வேறு வைத்தியசாலையிலும் இல்லை. இது தொடர்பாக மக்கள் பல முறை போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை

எனவே வைத்தியர்கனை நியமித்து வைத்தியசாலை எப்போது முறையாக இயங்குவது அது வரைக்கும் 09 தோட்ட தொழிலாளர்களின் வைத்திய சேவையை இவர்கள் எங்கு போய்

பெற்று கொள்வார்கள். தற்N;பாது சுமார் 9 தோட்டங்களுக்கும்; பொதுவாக ஒரு வைத்தியரே காணப்படுகினறார். அங்கும் முறையான மருந்து வசதிகள் இல்லை அவசர தேவை ஏற்படும்

போது தோட்ட லொறிகள் மூலமாக புஸ்ஸலாவ பிரதேசத்தில் காணப்படும் வைத்திசாலைக்கு அனுப்பபடுகின்றனர். சிலர் முச்சக்கர வண்டிகளில் செல்கின்றனர். பாதையோ குன்றும்

குழியுமாக காணப்படுகின்றது. லொறியிலும் முச்சக்கர வண்டியி;லும் செல்லும் போது குழந்தைகள் பாதையிலேயே

கிடைத்துள்ளது. சிலர் தகுந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படாததினால் இறந்தும் உள்ளனர்.

இவ் நவீன காலத்தில் இப்படியும் நடக்கின்றது என்றால்;. அது மிகவும் ஆச்சரிய படுத்துவதாக்கும் வேதனைபடுவதற்குரியதாகும் சிலருக்கு தகுந்த நேரத்தில் வாகனங்கள் கிடைப்பதும் இல்லை சிலர்

தனியார் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றனர்.

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்துடன் ஒப்பிடும் போது இவ்வகையான நிலைமை வேதனைக்குறிய விடயமாகும்.

Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கமும், அரசில் உள்ள இதொகாவும் பதில் கூற வேண்டும்-மனோ கணேசன்

அரசாங்கமும், அரசில் உள்ள இதொகாவும் பதில் கூற வேண்டும்-மனோ கணேசன்

அரசியலமைப்பு குழுவில் மலையக பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பிலும், நஷ்டமடையும் தோட்டங்கள், சிறுதோட்டடங்களாக மறுசீரமைப்பு செய்யப்படுவது தொடர்பாகவும்,நாம் எழுப்பியுள்ள

கோரிக்கைகளுக்கு அரசாங்கமும், அரசுக்கு உள்ள இருக்கும் இதொகாவும் பதில் குறை வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது பற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில், மலையக தமிழ் மக்கள் தொடர்பில், கடந்த இரு வாரங்களுக்குள், இரண்டு

முக்கிய கோரிக்கைகளை நான் தேசிய அரங்கில் முன் வைத்துள்ளேன்.

முதலாவது, அரசியலமைப்பு குழுவில், ஏனைய சகோதர இன பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதை போன்று, மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும்;

இரண்டாவது, பெருந்தோட்டங்களை, சிறு தோட்ட முறைமைக்குள் கொண்டு வந்து காணிகள் பிரித்து வழங்கப்படும் உத்தேச

திட்டத்தில், தோட்ட தொழிலாளர்களையும் பங்காளிகளாக்கி அவர்களுக்கும் காணிகள் வழங்க வேண்டும்;

இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பிலும் இதொகா மெளனமாக இருக்கின்றது. அரசாங்கத்துக்குள் இருக்கும் மலையக கட்சியான இதொகா, இதுபற்றி தமக்கு எதுவுமே தெரியாதது போல், கள்ள மெளனம் காக்கிறது.

இவை பற்றி இவர்கள் ஜனாதிபதி, பிரதமருடன் இதுவரை பேசியதாக தெரியவில்லை. இவை பற்றி நடைபெற்றுள்ள உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் இதொகா பிரதிநிதிகளுக்கு கலந்துக்

கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படக்கூட இல்லை. மலையக மக்களின் இருப்பு சம்பந்தமான இந்த அடிப்படை பிரச்சினைகள் பற்றி

இதொகா பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும், பேசுவதில்லை. வெளியேயும் பேசுவதில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே, தோட்டத்தொழிலாளருக்கு உறுதியளித்து, இந்த வருடம் ஜனவரி முதல் வழங்குவதாக சொன்ன ஆயிரம் ரூபா நாட்சம்பளம் போன்று இவையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

விரைவில் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டு சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஒழிய போகிறது. அப்போதும் இதொகா, அரசுக்கு

உள்ளே பேசாமடந்தைகளாக இருக்கப்போகின்றதாத் என கேட்க விரும்புகின்றேன்

இது தொடர்பில், மலையக அரசியல் சமூக இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக ஊடக போராளிகள், மலையக பிராந்திய மற்றும் தேசிய ஊடகங்கள்,

ஊடகவியலாளர்கள், சர்வதேச மலையக அமைப்புகள் ஆகியவை மத்தியில், தேசிய, சர்வதேச மட்டங்களில் கருத்து பரிமாற்றம் நடைபெற வேண்டும். அதற்கு நாம் ஆவன செய்வோம்.

Posted in இலங்கை செய்திகள்

விசாரிக்க படும் ரிஷாட் பதியுதீன் -சிறை செல்வாரா ..?

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்

பொலிஸ் விசாரணை பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்

கிரியெல்ல, மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கிய பேரூந்து -11 பேர் காயம்

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இன்று (15) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்த

நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து

சபைக்கு சொந்தமான பஸ்ஸும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்

சென்ற சிறிய ரக பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் 11 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் 28 பேர் கொரனோவால் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 28 பேர் நேற்று (14) இனங்காணப்பட்ட

நிலையில், தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் 3262ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 3005 பேர் குணமடைந்துள்ளதுடன், 244 பேர் தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நேற்று தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்

பங்களாதேஷில் இருந்து வந்த நால்வர், குவைத்தில் இருந்து வந்த ஒருவர்,

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 11 பேர், கட்டாரில் இருந்து

வந்த ஒருவர், வியட்நாமில் இருந்து வந்த ஒருவர், இந்தியாவில் இருந்து

வந்த 05 பேர், பஹ்ரைனில் இருந்த வந்த 04 அத்துடன், பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவர்

Posted in இலங்கை செய்திகள்

சேதமடைந்த கப்பல் தொடர்பில் கடல்சார் பங்குதாரர்கள் தமது கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

சேதமடைந்த கப்பல் தொடர்பில் கடல்சார் பங்குதாரர்கள் தமது கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

சேதமடைந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் தொடர்பாக தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து கடல்சார்

பங்குதாரர்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA) தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

நேற்று (14) இடம்பெற்ற கடல்சார் பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார். தீயினை

அணைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட செலவுகளை கோருவதற்கான வழிகள் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நீர் நிலைகளில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் எதுவும் தென் படவில்லை என லஹந்தபுர உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, சேதமடைந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் மட்டக்களப்பில் இருந்து சுமார் 59 கடல் மைல் தொலைவில் நிறுத்தி

வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்ய கோட்டா திட்டம்

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்ய கோட்டா திட்டம்

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரசஇ தனியார் துறைகள் மற்றும் சிறியளவிலான பண்ணையாளர்களை

இணைத்து குறுகிய மற்றும் நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புல் வகைகளை வளர்த்தல்இ கறவை பசுக்களை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் சேவைகளை

மேம்படுத்தி விரைவாக இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கால்நடை வளங்கள்இ பண்ணைகள் மேம்பாடுஇ பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின்

எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் வருடாந்த பால் தேவையில் 40 வீதத்திற்கும் குறைவான அளவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. போசணையுள்ள சுத்தமான பசும்பாலை பெற்றுக்கொள்ளும்

சந்தர்ப்பம் இதன் காரணமாக மக்களுக்கு கிடைப்பதில்லை. அடுத்த பத்து ஆண்டுகளில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு

நடவடிக்கை எடுக்கப்படுமென சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான கறவை இனங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பசும்பால்

உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உயர் தரம்வாய்ந்த புல் வகைகளை வளர்த்தல் மற்றும் பசுக்களுக்கான உணவுகளை உற்பத்தி செய்வது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மொத்த பசும்பால் உற்பத்தியில் சுமார் 85 வீத உற்பத்தி சிறியளவிலான பால் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களை வலுவூட்டி குறித்த

விகிதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒரு லீட்டர் பாலின் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதனால் பண்ணையாளர்கள் ஊக்கமிழந்துள்ளனர். புற்கள் உள்ளிட்ட பசுக்களுக்கான உணவுகளை நிவாரண அடிப்படையில்

பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டியதன் தேவையையும் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு தேவையான விலங்குணவு உற்பத்திக்கு பண்ணையாளர்களை ஊக்குவிப்பது நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்டது.

விலங்கு பண்ணைகளை அண்மித்த சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தலையிட வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டிக்காட்டிய

ஜனாதிபதிஇ அதனை பண்ணையாளர்களுக்கு சுமையாக ஆக்கிவிடக் கூடாதென்று குறிப்பிட்டார்.

பாரம்பரியமாக நடத்திவரும் விலங்கு பண்ணைகளை மக்களின் முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு உரிய விசாரணைகள் இன்றி மூடிவிடக்கூடாதென பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டு 15 தோட்டக் கம்பனிகளின் பங்களிப்புடன் 15,000 கறவைப் பசுக்களை

இனப்பெருக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை விரிவுபடுத்தல் பாரியளவிலான உற்பத்தியாளர்களை ஏற்றுமதி சந்தையுடன் தொடர்புபடுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முட்டை

கோழி இறைச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2020ஆம் ஆண்டு 16 மில்லியன்

அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் துறை முதலீட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின்

செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்

தலைவர்கள் மற்றும் தனியார் தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்

Posted in இலங்கை செய்திகள்

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகள்

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகள்

ஆடிகம சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 5 சிறுமிகள் அங்கிருந்து தப்பிச்சென்ற

நிலையில், இன்று (14) அதிகாலை முந்தல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

12 முதல் 15 வயதுடைய இந்த சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சிறுமிகள் நடந்து சென்ற நிலையில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதனை கண்டுள்ளனர்.

பின்னர் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் வந்தமை தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்காவின் உளவாலியே மிலிந்த மொறகொட- வெடித்தது சர்ச்சை

அமெரிக்காவின் உளவாலியே மிலிந்த மொறகொட- வெடித்தது சர்ச்சை

அமெரிக்க அரசாங்கத்தின் உளவாலியாக மிலிந்த மொறகொட செயற்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு

ஒன்றியம் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு அவ​ரை நியமிக்க வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

2002ஆம் ஆண்டு ​தொடக்கம் இதுவரையிலிருந்து அமெரிக்கத் தூதுவர்கள் நால்வரால் அனுப்பட்ட 150 கேபில் மூலமான

தகவல்களிலும் மிலிந்த மொறகொடவின் பெயர் இருப்பதாக தெரியந்துள்ளதெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலம் வெளியான தகவல்களில் மிலிந்த மொறகொட பற்றிய தகவல்கள் எவையும் தெரியவந்திருக்கவில்லை என்பதோடு, கேபில் வலையமைப்பு

மூலமான தகவல்களை வாசிக்கும்போது மிலிந்த மொறகொட அமரிக்காவின் உளவாலியாக செயற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதெனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

அத்தோடு, அவர் அரசாங்கத்துக்கு சொந்தமான சொத்துக்களை குறை மதிப்பீடு செய்து தனியார் துறைக்கு விற்பனை செய்தார்

என்று இரு வழக்குத் தீர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் குறிப்பிடுகிறது.

மேற்படி வழக்கு விவகாரங்கள் தொடர்பாக மிலிந்த மொறகொடவுக்கு எதிராக எந்த வேளையிலும் வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமென நீதிமன்றம் சட்டமா

அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும், அதனால் அவர் எவ்வேளையிலும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி நபரை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய இயலுமை கொண்ட நாட்டுக்கு

உயர்ஸ்தானிகராக நியமிப்பது பாரதூரமானதெவும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாதிகளும் நாடாளுமன்றத்துக்கு வரலாம்- ஐக்கிய தேசிய கட்சி

பயங்கரவாதிகளும் நாடாளுமன்றத்துக்கு வரலாம்- ஐக்கிய தேசிய கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான பிரேமலால் ஜயசேகரவுக்கு சத்தியபிரமாணம் செய்ய

இடமளித்தமை பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் செயலென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில், மரண தண்டைக்குள்ளானக் கைதியொருவர் நாடாளுமன்ற

ஆசனத்தில் அமர்வதற்கான எந்தவொரு முன்மாதிரியான நிகழ்வும் இலங்கை வரலாற்றில் இடம்பெற்றதில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேற்படி விடயத்தை தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கே உள்ளதென நீதிமன்ற தீர்ப்பிலும்

குறிப்பிடப்பட்டுள்ளதோடு, மரணதண்டனைக்குள்ளான கைதியான பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றத்தில் அமர்த்த முடியுமென வழக்ககுத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.

மேலும், அரசமைப்பின் 89ஆவது உறுப்புரையின் பிரகாரம், மரணதண்டனைக்குள்ளான கைதியொருவர், நாடாளுமன்றத்தில்

நடைபெறும் வாக்கெடுப்பகளில் கலந்துக்கொள்ள முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் அக்கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பிரேமலால் ஜயசேகர தொடர்பாக சபாநாயகர் எடுத்த தீர்மானத்தைப் மறுபரிசீலனை செய்ய வேண்டியது

அவசியமெனவும், நாடாளுமன்ற ஒழுங்குகளை புறக்கணித்துச் செயற்படுவதால் பயங்கரவாதிகளும் நாடாளுமன்றத்துக்கு

தெரிவாகக்ககூடிய நிலைமை உருவாகும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அறிவுருத்தியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

51 இராணுவ முகாம்களில்- 50,000 பட்டதாரிகளுக்கான பயிற்சி பாடநெறி

51 இராணுவ முகாம்களில்- 50,000 பட்டதாரிகளுக்கான பயிற்சி பாடநெறி

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்காமைவாக அரச சேவைக்கு இணைத்துக்

கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள

பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என

51 இராணுவ நிலையங்களில் திங்கள்கிழமை (14) கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது.

ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் ஐந்து மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, முழுமையான ஆற்றல்மிக்க பணியாளர்களாக தேசத்தைக்

கட்டியெழுப்புவதில் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்வதற்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக பாதுகாப்பு

அமைச்சின் நேரடி கண்காணிப்பில் ஏழு பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒருங்கிணைப்பில் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு கட்டமும் 10,000 பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அரச துறையின் முழு திறனை ஒரே நேரத்தில் அடைவதற்கு ‘தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாட்டு பயிற்சி,

முகாமைத்துவ பயிற்சி, தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவன பயிற்சி, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. ‘ஒத்திசைவு மற்றும் நெகிழ்வுத் தன்மை

திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதே வேளை மோசமான உற்பத்தித்திறனைக் குறைக்கும். இந்த பயிற்சியில் நிர்வாக திறன்கள், அரசாங்க

பொறிமுறையின் குறிக்கோள்கள், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, புதுமை, நெகிழ்வுத்தன்மை,

காட்சிப்படுத்தல், சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

மாவட்டங்களின் படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள்

வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு பெறும் வரை அரசத்துறை ஊழியர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முக்கியமான தேவையை மையமாகக் கொண்டு இராணுவப் பயிற்சியின் ஊடாக நீண்ட கால

மற்றும் குறுங்கால இலக்குகளில் திறம்பட மற்றும் விளைத்திறனாக பணியாற்றுவதற்கான தலைமைத்துவம், நிர்வாக திறன், இலக்கு

மீதான கவனம், தன்நம்பிக்கை மற்றும் அரச பொறி முறையின் நோக்கங்களை புரிதல் என்பவற்றை வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த குறுகிய கால முயற்சியின் குறிக்கோளானது தலைமைத்துவ திறன்கள் மற்றும் பண்புகள், குழு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும் உயர்தர

பொதுத்துறை சேவையை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க, இலக்கு சார், ஒழுக்கமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதாகும். நீண்டகால நோக்கங்களை

ஐந்தாண்டுகளுக்குள் அடையக்கூடிய வகையில் பொதுத்துறை ஊழியர் படையை திறமையான வழிமுறைகள், அணுகுமுறைகள்

சமூகத்திற்கு உழைக்கும் கலாச்சார வளர்ச்சி, பொதுத்துறை சேவை அங்கிகாரம், மதிப்பு, அடையாளம் செயல்பாட்டு அம்சங்களை

மதிப்பீடு செய்தல் எனும் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதன்படி இராணுவப் பயிற்சித் திட்டம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயிற்சி நடவடிக்கைகள், குழு கட்டமைத்தல் நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன்

ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஐந்து சுயாதீனமான ஒன்றோடொன்று தொடர்புடைய தொகுதிகளின் கீழ் தொடங்கப்படும், இது பொதுத்துறையின் பங்களிப்பை

ஆற்றல்மிக்கதாக மாற்றும். வழி. இராணுவ பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள்

அமைச்சு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சில அரச நிறுவனங்கள் இத் திட்டத்திற்கா செயல்படவுள்ளன.

இந்த ஐந்து மாத முழுவதும் பட்டதாரி பயிற்சி திட்டத்தின் மூலோபாய கருத்துருவாக்கத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும்

பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் வழிகாட்டல்களில் இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகம் முன்னெடுக்கின்றது.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடன் சலுகை- டக்ளஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடன் சலுகை- டக்ளஸ்

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி

வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை பெற்றுக்

கொள்ள விரும்புபவர்களுக்கு ஏற்படக் கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு இரண்டு நாள் வியஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் மக்கள்

எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் நேரில் சென்று ஆராய்ந்தறிந்தறிந்தார்

இந்நிலையில் மாவட்டத்தின் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளைச் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களது

பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சருக்கு அறியப்படுத்திய சிறு தொழிலாளர், அதுதொடர்பில்

அடிக்கடி கலந்துரையாடப்பட்டு உறுதிமொழிகள் வழங்கப்படுகின்ற போதிலும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு

சம்மந்தப்பட்ட தரப்பினரின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அத்துடன் நாட்டிலேற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமது தொழில் நடவடிக்கைகளில் பாரிய

பொருளாதார நெருக்கடி நிலை தோன்றியிருந்ததாகவும் அவற்றுக்கு தீர்வு பெற்றுத்தருவதற்கான வழிவகைகளை உருவாக்கி தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி

வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவற்றை பெற்றுக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு வங்கிகளில் ஏற்படக் கூடிய

நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

லயன் எயார் விமானத்தில் பயணித்த மற்றுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய நிலைமை மோசமாக உள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானத்தில் பயணித்த நிலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் இன்று (13) காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

285 பயணிகளுடன் பயணித்த லயன் எயார் விமானம் அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட திடீர்

சுகயீனத்துக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பயணிகள் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிப்பு

13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிப்பு

போதைப்பொருள் தடுப்புபிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 22ஆம் திகதி வரை

நீடிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள்

என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்களுக்கு எதிராக – யாழ் மீனவர்கள் போராட்டம்

இந்தியா மீனவர்களுக்கு எதிராக – யாழ் மீனவர்கள் போராட்டம்

வடமராட்சிக் கடற்ப்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையில் இருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தூரத்தில் நின்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட றோளர் படகினைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடலில் விடப்படும் பல இலட்ச்சம் ரூபா பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக மிக அதிகளவில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகிறது. இதனைக் கண்டித்து வடமராட்சி

மீனவர்கள், வாயை மூடிக் கட்டி மெளன கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நாளை (14) முன்னெடுக்கவுள்ளனர்.

நல்லூர் முன்றலில் இருந்து காலை பத்து மணிக்கு ஆரம்பமாகும் குறித்த மெளன கவனயீர்ப்பு பேரணியானது, இந்தியத் தூதரகத்தைச் சென்றடைந்து அங்கு இந்தியத் துணைத் தூதரிடம்

மகஜர் ஒன்ரைக் கையளித்து, இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் தெரியப படுத்தி, இதனால் தமது வாழ்வாதாரப் பாதிப்பு

மற்றும் உடமைகள் சேதமாக்கப்படுவது தொடர்பில் எடுத்துக் கூறி எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துமாறு, துணைத் தூதுவரிடம் கோரவுள்ளனர்.

தொடர்ந்து நீரியல் வளத்துறை அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர்.

தொடர்ந்து நீரியல் வளத்துறை திணைக்களம், மாவட்டச் செயலகம் இறுதியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று

ஆளுநருக்கு மகஜர் கையளித்து தமது போராட்டத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்கள் நேற்று முன்தினம் (11) ஒன்று கூடி நடத்திய கலந்துரையாடலிலேயே குறித்த முடிவு எட்டப்பட்டதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் வ.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நீர்க்கொழும்பில் 30 இளைஞர் யுவதிகள் கைது.

நீர்க்கொழும்பில் 30 இளைஞர் யுவதிகள் கைது.

நீர்க்கொழும்பு, கொச்சிகடை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 30 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த காலங்களிலும் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப் பொருட்களுடன்

இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை தொடக்கம்

வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை தொடக்கம்

மீண்டும் ஆரம்பிப்போம்- வீதி ஒழுக்கங்களை” என்ற தொனிப்பொருளின் கீழ், நாளை (14) தொடக்கம் வீதி ஒழுங்கைச்

சட்டம் கடைபிடிக்கப்படவுள்ளதென, போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

நாளை ​தொடக்கம் 16ஆம் திகதி வரை காலை 6 மணியிலிருந்து காலை 10 மணிவரைமேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட

வீதிகளில் இந்த வீதி ஒழுங்கு சட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியின், பொல்துவ சுற்றுவட்ட வீதி தொடக்கம் ஹோர்ட்டன் பிளேஸ் வரை, பேஸ்லைன் வீதியில், களணி பாலத்திலிருந்து ஹைலெவல் வீதி சுற்றுவட்டம்

வரை,ஹைலெவல் வீதியின் அனுலா வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, பித்தளை சந்தி, ஸ்ரீ சம்புத ஜயந்தி மாவத்த, தும்புளை சந்தி, தேர்தஸ்டன் கல்லூரி, மார்கஸ் பெர்ணான்டோ வீதி, பொது

நூலகம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்த வரை, காலி வீதியில் வில்லியம் சந்தியில் ஆரம்பித்து, தெஹிவளை, காலி வீதி

சுற்றுவட்டம் வரையான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் செய்றபடுத்தப்படவுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்

எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்

MT New Diamond கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் வலயத்துக்கும் அச்சுறுத்தல்

ஏற்பட்டுள்ளதாக கடல் மாசுபடுதலைத் தடுக்கும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலில் இருக்கும் எரிபொருளின் மாதிரியைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட மூன்று விடயங்களுக்காக குறித்த அதிகார சபைக்கு சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

தீப்பற்றலுக்கு உள்ளான MT New Diamond கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நாளை

கலந்துரையாடவுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஏழாயிரம் கோடியில் உர மானியம் வழங்கும் கோட்டா அரசு

ஏழாயிரம் கோடியில் உர மானியம் வழங்கும் கோட்டா அரசு

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம்

பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும்

உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்தார்

நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத்

தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாவை

ஒதுக்கியுள்ளது என்று உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்தார.