Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!
வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!
வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இடம்பெற்று வருகின்றது.
மாநாடு இன்று (03) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பை பொலிசார் பலப்படுத்தியிருந்தனர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் மோதவுள்ளார் யாழ் வீராங்கனை…!
13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார்.
நடந்து முடிந்த பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியின் பின்னர், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 7 பேர் கொண்ட பெண்கள், ஆண்கள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
பேஸ்புக் நண்பர்களாகி குடிவெறியில் ஆடிய 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது
தெஹிவளை கடல் கரை பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் முக நூல் வாயிலாக இணைந்த நூறு பேர் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் 17 பெண்கள் உள்ளிட்ட நூறு ஆண்கள் போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகினார் என்ற குற்றம் சுமத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது
தேர்தலில் யாரை ஆதரிப்பது – வவுனியாவில் கூடும் தமிழரசு கட்சி _ (நாடகக்குழு )
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று வவுனியாவில் தமிழரசு காட்சி செயல் குழு கூடவுள்ளது ,இதிலேயே இந்த தீர்மான முடிவுகள் அறிவிக்க படும் என தெரியவருகிறது
விடுதலை புலி ஆதரவாளர்களை நாம் துன்புறுத்தவில்லை- மலேசிய பொலிஸ்…!
விடுதலை புலி ஆதரவாளர்களை நாம் துன்புறுத்தவில்லை- மலேசிய பொலிஸ்…!
விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் உள்ள சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கடுமையாக நிராகரிப்பதாக மலேசிய பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் கடந்த தினம் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து
இந்திய மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடலில் சிங்களப்படையால் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் சிங்கள கடற்படையால் அப்பாவி தமிழக மீனவர் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார படுத்த பட்டுள்ளனர் .
சிங்கள கடல் படையல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் வேட்டையாட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
பிரிட்டன் – லண்டன் பகுதியில் நாடு கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்ய பட்ட பிரேத்தியாக
இடமொன்றில் விசேட இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது ,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கல் தமிழின அழிப்பு நாளான மே 18 நாளினை நினைவு கூறுமுகமாக
இந்த இரத்த தானம் வழங்க பட்டுள்ளது .
இதில் இளையோர்கள் முதல் பலர் இதில் கலந்து கொண்டு இரத்த தான நன்கொடையினை வழங்கினார் .
தமிழீழ விடுதலை போராட்டம் சிங்கள அரச பயங்கவாத அரசால் முற்றாக அழிக்க பட்ட பின்னர் உருவாக்க பட்ட
நாடு கடந்த அரசாங்கம் தனது ஈழ கனவை தாங்கியபடி பயணித்து வருகிறது .
மேற்படி அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இலங்கை செல்வதற்கு தடை விதிக்க , பட்டுள்ளது
















