Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
காவல்துறையால் 27 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன தெரியுமா ..?
காவல்துறையால் 27 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன தெரியுமா ..?
இலங்கை – சிவனொளிபாதமலைக்கு யதாஹிரைஸ் என்ற பக்த கோடிகளில் 27 பேர் போதைவஸ்து எடுத்து சென்ற
வேளை காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
உயிர் குடிக்கும் ரயில்கள் – ஒருவர் பலி
உயிர் குடிக்கும் ரயில்கள் – ஒருவர் பலி
இலங்கை – காலிப்பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார் ,பலியானவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள கிராமங்கள் – மக்கள் இடப் பெயர்வு
வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள கிராமங்கள் – மக்கள் இடப் பெயர்வு
வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள கிராமங்கள் – மக்கள் இடப் பெயர்வு
இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் கனமழை காரணமாக,தென்னி லங்கையின் பல முக்கிய
குளங்கள் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதால் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன ,
மேலும் சில குளங்கள் திறக்க படும் நிலையில் உள்ளதால் ,தாழ்நில பகுதியை சேந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது ,
இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் ,பல நூறு வீடுகள்
சேதமடைந்துள்ளன .சொத்தழிவு பல மில்லியன்களை தாண்டும் என நம்ப படுகிறது

மணல் கொள்ளையில் ஈடுபட்ட- 25 மணல் கொள்ளை மாபியாக்கள் பளையில் கைது
மணல் கொள்ளையில் ஈடுபட்ட- 25 மணல் கொள்ளை மாபியாக்கள் பளையில் கைது
இலங்கை தமிழர் பகுதியாம் இயக்கச்சி மற்றும் பளை , உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து மணல்
கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணல் மாபியா கும்பல்களை சேர்ந்த 25 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
கோட்டா அரசு மணல் அகழ்வதற்கு விடுக்க பட்ட பத்திரத்தை நீக்கியதன் பின்னர் இந்த மணல் கொள்ளை வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது ,
மக்கள் மேற்கொண்ட முறைபாடுகளை அடுத்து ,பளை பொலிஸாரால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பிள்ளையானை விடுதலை செய்ய கோரிக்கை – வெளியில் வருகிறார்
பிள்ளையானை விடுதலை செய்ய கோரிக்கை – வெளியில் வருகிறார்
இலங்கையில் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து கிழக்கு மாகாணத்தின் முதல்வராக விளங்கிய பிள்ளையான் சிறையில் அடைக்க பட்டுளளார் ,
இவர் ஜோசப் பரராயசிங்கம் கொலையில் சம்பந்த பட்டு கைதானார் ,இவ்வாறு கொலை குற்றத்தை புரிந்தவரை
விடுதலை செய்ய பிரதமர் மகிந்தவிடம் கோரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
இந்த கோரிக்கை கருணாவால் முன்வைக்க பட்டுள்ளது ,இவரது விடுதலையுடன் பெரும் கடத்தல்கள் மற்றும்
கொலைகள் என்பன இடம்பெற ஆரம்பிக்கும் என நம்ப படுகிறது
யாழில் திடீரென முளைத்த புத்தர் சிலை – மக்கள் எதிர்ப்பால் அகற்றல்
யாழில் திடீரென முளைத்த புத்தர் சிலை – மக்கள் எதிர்ப்பால் அகற்றல்
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறை சாலைக்கு முன்பாக பிக்கு ஒருவரது நினைவ தாங்கிய சிலை ஒன்று நிறுவ பட்டது
இதனை அடுத்து மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சிலை அங்கிருந்து அகற்ற பட்டது
.இலங்கை ஒரு பவுத்த நாடு என முழங்கி வரும் இனவாத ஆட்சியாளர்கள் ஆண்டு வரும் இந்த நிகழ்காலத்தில் இந்த
புத்த பிக்குகள் சிலைகள் முளைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கடைக்குள் புகுந்த பேரூந்து – படங்கள் உள்ளே
கடைக்குள் புகுந்த பேரூந்து – படங்கள் உள்ளே
இலங்கை – லக்ஸபான பகுதியில் அரச பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பட்டதை இழந்து கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது ,
இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர் ,பேரூந்து மற்றும் ,கடை என்பன பலத்த சேதமடைந்துள்ளது


புதுவருடத்தை முன்னிட்டு -இராணுவம் பொலிஸ் குவிப்பு – பாதுகாப்பு தீவிரம்
புதுவருடத்தை முன்னிட்டு -இராணுவம் பொலிஸ் குவிப்பு – பாதுகாப்பு தீவிரம்
இலங்கையில் இடம்பெறவுள்ளத்தாற் மற்றும் புதுவருட பிறப்பை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பு கருதி இராணுவம்
போலீசார் மேலதிக சேவையில் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .
இவ்வேளை விசேட பேரூந்து சேவைகளும் ஈடுபடுத்த படுகின்றன .கொள்ளையர்கள் கைவரிசை காட்ட கூடும் என்பதால் இந்த பாதுகாப்பபு தீவிர படுத்த பட்டுள்ளனவாம்
என் அரசியல் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனமுமே!
என் அரசியல் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனமுமே!
கல்முனை மாநகர முதல்வராக இருந்த காலங்கங்களில் என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள்
போன்றவற்றையும், மக்களுக்கு நான் கூறவருகின்ற விடயங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று என்னை உச்சத்துக்கு கொண்டு சென்ற ஊடகங்களையும்,
ஊடகவியலாளர்களையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்
தேசிய அமைப்பாளரும் மெட்ரோ பொலிடன் கல்லுரியின் தவிசாளருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) அமைப்பினருக்கும், அவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு (20) சாய்ந்தமருது அவரது இல்லத்தில்
இடம்பெற்றது. அந்த சந்திப்பன்போது அவர் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என் அரசியல் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனமுமே!
ஊடகவியலாளர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் ஊடகப் பணியினை மிகச் சிறப்பாக செய்து
வருகின்றார்கள். அவர்களின் கஷ்டங்களையும், துன்பங்களையும் நான் நன்கறிவேன்.
அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் எச்சந்தர்ப்பத்தில் தேவைப்பட்டாலும் அதை நிவர்த்தி செய்துகொடுக்க
என்னால் இயன்றளவு செய்துகொடுத்துள்ளேன். செய்து கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன்.
ஊடகவியலாளர்களை எனது தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்திவிட்டு அவர்களை கண்டும் காணதவர்போன்று கழட்டி விட்டுச் செல்கின்றவன் நான்
அல்ல என்பதை என்னுடன் உறவு வைத்திருக்கின்ற சகல ஊடகவியலாளர்களும் அறிவார்கள்.
அதுமாத்திரமல்ல, எனது அரசியல் பயணத்திலும் கூட, நான் ஒருபோதும் அவ்வாறு நடந்தது கிடையாது. அதில் ஏதாவது
முறன்பாடுகள் அல்லது தடைகள் ஏற்பட்டால் அதற்கான தீர்வுகளைக்காண முயற்சிப்பேன்.
அவ்வாறு தீர்வு கிடைக்காவிட்டால் நான் இருக்கின்ற கட்சியின் தலைமையிடம் நேருக்கு நேராக மிக
நேர்மையான முறையில் சொல்லிவிட்டு எனது இராஜினமா கடிதத்தை கொடுத்து முசாபாச் செய்துவிட்டு சந்தோஷமா விழகிச் செல்வேனே தவிற,
அதில் இருந்துகொண்டு கள்ளத்தனமான அரசியல் பயணத்தையோ அல்லது வேறு தொடர்புகளையோ நான் ஒருபோதும் வைத்துக்கொள்ளமாட்டேன்.
என் அரசியல் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனமுமே!
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்துகொண்டு எனது அரசியல் பயணத்தை முன்னெடுத்தபோது அதில் எனக்கு ஏற்பட்ட
தடைகளைப்பற்றி அந்தக் கட்சித் தலைமையிடம் எடுத்துக்கூறி அதற்கு தீர்வுகாண முயற்சித்தேன்.
அவ்வாறு முயற்சித்தும் அதற்கு சரியான தீர்வு எனக்கு கிடைக்கவில்லை. தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக
அக்கட்சியில் இருந்துகொண்டு கள்ளத்தனமான இருவேட அரசியல் பயணத்தை தொடர்ந்திருக்கலாம்.
அப்படிப்பட்ட இருவேட அரசியல் பயணத்தை என்னால் ஒருபோதும் தொடரமுடியாது. ஏனென்றால், எனது சிறு
வயது கல்விப் பருவத்திலிருந்து இந்தப் பழக்கம் இருந்துகொண்டு வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீமிடம் நேராகச் சென்று எனது இராஜினமா கடிதத்தை கொடுத்துவிட்டு
அவருடன் முசாபாச் செய்துவிட்டு மிகச் சந்தோஷமான முறையில் அந்தக் கட்சியிலிருந்து விலகி,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் மிக நேர்மையாக எனது அரசியல்
பயணத்தை முன்னெடுத்து அதன் மூலம் எமது மக்களுக்கு பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றேன் என்றார்.
இந்த சந்திப்பில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ், செயலாளர் பைஷல் இஸ்மாயில்,
ஒன்றியத்தின் பிரதித் தலைவர்களான எம்.எச்.எம்.கியாஸ், அபுபக்கர் மற்றும் ஆசிரிய ஆலோசகரும், எழுத்தாளருமான எஸ்.எல்.மன்சூர் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள்
ஆகியோரினால் இவ்வாண்டின் சங்க செயற்பாடுகள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
அதற்கான சகல உதவி ஒத்தாசைகளை தன்னால் இயன்றளவு செய்து தருவதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்
தேசிய அமைப்பாளரும் மெட்ரோ பொலிடன் கல்லுரியின் தவிசாளருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் இதன்போது வாக்குறுதியளித்தார்.
காலநிலை சீற்றத்தில் சிக்கி நால்வர் பலி
காலநிலை சீற்றத்தில் சிக்கி நால்வர் பலி
இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பருவமழை காரணாமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர்
,.,மேலும் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,பல வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ள
,இதுவரை இதனால் ஏற்பட்ட முழுமையான சொத்து அழிவு விபரங்கள் தெரியவரவில்லை
காணாமல் போனவர் – சுடலைக்குள் இருந்து சடலமாக மீட்பு
காணாமல் போனவர் – சுடலைக்குள் இருந்து சடலமாக மீட்பு
மன்னார் -நானாடடன் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சுடலை ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் ,
இவரது மரணம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இதுவரை
இந்த மரணம் கொலையா ,தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவிலை
அரிசி விலையை – அதிகமாகி விற்றபனை புரிந்த 89 கடைகளுக்கு ஆப்பு – பாய்ந்தது சட்டம்
அரிசி விலையை – அதிகமாகி விற்றபனை புரிந்த 89 கடைகளுக்கு ஆப்பு – பாய்ந்தது சட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து அரிசிக்கான கட்டுப்பாட்டு
விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பற்றிய தேடுதல்களை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் நுகரவோர் பாதுகாப்பு அதிகார சபையினால் உள்நாட்டு சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோகிராமிற்கான
அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய் என வர்த்தமானியினூடாக அறிவித்தல் விடுக்கப்பட்டது.
நேற்று (20) மற்றும் இன்றைய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 1430 அரிசி
விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்,
அவற்றுள் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் 512 வர்த்தக நிலையங்கள் இதன்போது இனங்காணப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (21) இனங்காணப்பட்ட அத்தகைய 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன்,
நேற்று இனங்காணப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் போதிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
தன்னை தானே சுட்டு நபர் தற்கொலை
தன்னை தானே சுட்டு நபர் தற்கொலை
இலங்கை – கதிர்காமம் பகுதியில் தனது துப்பாக்கி மூலம் தன்னை தானே சுட்டு நபர் ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார்
,இவரது இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
தேர்தல் இலக்கு – சிறு வங்கி கடன் பெற்றவர்கள் மீள் செலுத்த தேவையிலை – இரத்து செய்த மகிந்தா ,கோட்டா
தேர்தல் இலக்கு – சிறு வங்கி கடன் பெற்றவர்கள் மீள் செலுத்த தேவையிலை – இரத்து செய்த மகிந்தா ,கோட்டா
இலங்கையில் – இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து கோட்டபாய செயல் பட்டு வருகிறார் ,தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே இவர் நோக்கமாக உள்ளது ,
இதனை அடுத்து தற்பொழுது மக்கள் பெற்றுள்ள சிறு கிராமிய வாங்கி கடன்களை மீள செலுத்த தேவை இல்லை
எனவும் அதனை பெற்று கொள்ள வேண்டாம் என வங்கிகளுக்கு கோட்டா ,மகிந்தா உத்தரவிட்டுள்ளனர்
றஜிதவின் முன் யாமீன் தள்ளுபடி – எவ்வேளையும் கைதாகலாம்
றஜிதவின் முன் யாமீன் தள்ளுபடி – எவ்வேளையும் கைதாகலாம்
இலங்கையின் – முன்னாள் சுகாதார அமைச்சர் சஜித ஆளும் கோட்டா பாயாவின் அரசினால் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்க படலாம் என்ற நிலையில் ,தற்போது அவர் அதனை தடுக்கும் முகமாக முன் யாமீன் கேட்டு விண்ணம் செய்துள்ளார் .
அவ்வாறு விண்ணப்பிக்க பட்ட யாமீன் நீதிமன்றினால் தள்ளுபடி செய்ய பட்ட நிலையில் ,மீளவும் ஒரு யாமீன் கோரி விண்ணப்பித்துள்ளாராம்
மகிந்த குடும்ப ஆட்சியில் – மீண்டும் சிறை சாலைக்குள் துப்பாக்கி சண்டை
மகிந்த குடும்ப ஆட்சியில் – மீண்டும் சிறை சாலைக்குள் துப்பாக்கி சண்டை
இலங்கையில் மீளவும் மகிந்தா குடும்பம் ஆட்சி நிலை நிறுவ பெற்றுள்ளநிலையில் ,மீண்டும் சிறை சாலைக்குள்
கைதிகள் ,போலீசாருக்கு இடையில் துப்பாககி மோதல் இடம்பெற்றுள்ளது ,
இதன் பொழுது போலீசார் மீது கைதி ஒருவர் துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாகவும் இதனால் அங்கு போலீசாரும்
திருப்பி தாக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
நாட்டைவிட்டு தப்பி ஓடிய மங்கள சமரவீரா
நாட்டைவிட்டு தப்பி ஓடிய மங்கள சமரவீரா
இலங்கையில் – கோட்டபாய ராஜபக்ச பதவியில் அமர்ந்த நிலையில் அரசியல் பழிவாங்கல்கள் தீவிரம் பெற்றுள்ளன
,தனக்கு எதிராக செயல்பட்டவர்களை சிறையில் அடைத்து அவர்கள் அரசியல் வாழ்வை இல்லாது அழிக்கும் நகர்வில் கோட்டா ஈடுபட்டுள்ளார் ,
இதனால் அதன் கைது வலைக்குள் சிக்காது தப்பித்து கொள்ளும் நோக்குடன் மங்கள சமரவீரா நாட்டை விட்டு வெளியேறியுளளார் ,
அதுபோல சந்திரிக்காவும் நாட்டை விட்டு தப்பி செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,பாரளுமன்ற தேர்தல்
இடம்பெறுவேளை இவர்கள் நடத்துக்கு திருப்பி வரலாம் என எதிர்பார்க்க படுகிறது
யானை கட்சிக்குள் மோதல் -உக்கிரம் – இரண்டாக கட்சி உடையும் அபாயம்
யானை கட்சிக்குள் மோதல் -உக்கிரம் – இரண்டாக கட்சி உடையும் அபாயம்
பிரதமர் வேட்பாளராக செயற்பட வேண்டுமாயின் எந்தவித நிபந்தனைகளும் அற்ற வகையில் கட்சித் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச
தெரிவித்துள்ளார்,தொடர்ந்து கட்சிக்குள் எழுந்துள்ள உள்ளக முரண்பாடுகள் காரணமாகி சஜித் புதிய கட்சி அமைத்து தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது
,ரானிலோ தான எனத்தடை ஆளவேண்டும் என கங்கணம் கட்டிய வண்னம் உள்ளதே இந்த இழுபறிக்கு காரணமாக அமைந்துள்ளது
இலங்கையின் – மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையின் – மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலையை அடுத்து மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
கண்டி ,நுவரெலியா ,மாத்தறை ஆகிய பகுதிகளே இவ்விதம் ஆபத்தான பகுதிகளாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
இடிந்து வீழ்ந்த கொட்டல் – மூன்று வெளிநாட்டவர் காயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இடிந்து வீழ்ந்த கொட்டல் – மூன்று வெளிநாட்டவர் காயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை – பதுளை – எல்லா ரோக் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து அங்கிருந்த கொட்டல் ஒன்று இடிந்து
வீழ்ந்துள்ளது ,இவ்வேளை அதில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டவர்கள் பாடுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது










