லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு
நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழே கிரிந்தி ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்நில மக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
- சின்ஹராஜ வனக் காப்பகத்திற்குள் பூச்சி மற்றும் ஊர்வன பிடித்த 4 சீனர்கள் கைது
- ஹட்டனில் சுமார் 30 வீடுகளை வெள்ள நீரும் சேறும் சூழ்ந்தது
- கொழும்பில் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் அமைதிப் போராட்டம்
- பிள்ளையன் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வுத் தகவல் அளிப்பாளர்கள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
- கண்டியில் புதிய ரயில் பாலம் மற்றும் புறநகர் ரயில் மேம்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்












