கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச
கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொள்ளும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
கொழும்பில் தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும்,இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை
மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச
இந்நடவடிக்கை தவறானது என்றும்,ஆட்களை பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளதாகவும்,இந்த பதிவு முறைக்கு குறித்த
நடைமுறையையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்,இதற்காக பொலிஸ் முறையை பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும், ஏதேனும் நியாயமற்ற முறை
நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என்றும், எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்
- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது



















