மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்
மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.
மன்னார் – சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பங்கள் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்
தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவரை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை
- அரசாங்கத்தின் வரி அல்லாத வருவாய் 39.1% உயர்ந்து ரூ. 314.8 பில்லியனாக அதிகரித்துள்ளது
- களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது
- யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரான்
- இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கொண்டுள்ளது
- 23 பெரிய மற்றும் 15 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன
- பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 27 பேர் காயம்
- நில்வாலா மற்றும் ஜின் நதிகளின் சில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு
- நுவரெலியாவில் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த இளைஞர் கைது

















