17 நாள் போராட்டம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சுரங்க விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்ல் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
17 நாள் போராட்டம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் அம்பியூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சுமார் 15 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்குப் பணியில் வெற்றி கிடைத்துள்ளது.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் திகதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள்
, கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்

- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்

- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்

- யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

- தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது

- ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது

- முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில்

- மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்








