தரம்குறைந்த டீசல் விநியோகிக்கப்படுகிறது
தரம் குறைந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் , கொலன்னாவையில் குறிப்பிட்ட டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கைகளில்
அவற்றின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்
- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்
- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்












