அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும், இன்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
”அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த அழைப்பை விடுக்கிறோம். இன்றைய சந்திப்பின் முடிவுகளை நான் அமைச்சரவைக்கு அறிவிப்பேன்.
தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான ஆணையை தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
”பல கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன” என தேர்தல் ரத்து செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தும் போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தனது தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தி குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
”முதலில் தேர்தலை நடாத்துங்கள். பின்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி யோசிப்போம்.
தேர்தல் மறுசீரமைப்பு எனும் போர்வையில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைது
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது
- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது
- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்
- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

















