இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
Spread the love

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.

அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.

வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.

அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

  • புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்
    Spread the love         புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம் புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம் கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று, மோசமான வானிலை காரணமாக, புத்தளம்-அனுராதபுரம் சாலையில் உள்ள மீ ஓயா பாலம் அருகே நேற்று இரவு (16) சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏழு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் நான்கு ஆண்கள்…
  • இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது
    Spread the love         இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) திருச்சி மண்டலம், வெள்ளிக்கிழமை நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றி கழக (டிவிகே) நிர்வாகி உட்பட இருவரைக் கைது செய்து, 100 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தது. இந்த போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்தப்பட்டு, கூட்டாளிகள்…
  • கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    Spread the love         கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் கடுமையான மின்னல் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) காலை 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று (17) இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும். இந்த எச்சரிக்கையின்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு…
  • ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்
    Spread the love         ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர் ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாகிரகம் செய்து வரும் பௌத்த பிக்குகள் குழு ஒன்று, தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கியுள்ளது. நேற்று பிற்பகல் பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவிற்கு வந்தடைந்தனர். இரவில் அவர்கள் ஒரு குடிலை அமைக்க முயன்றபோது, ​​அவர்களுக்கும் காவல்துறைக்கும்…
  • இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு
    Spread the love         இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய கோளாறு காரணமாக நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய அமைப்புச் செயலகம் (NSO) தெரிவித்துள்ளது. இன்று (17) காலை சுமார் 11:45 மணியளவில் இந்த மின்வெட்டு ஏற்பட்டது. மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய கோளாறு காரணமாக நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகத்…