அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Spread the love

அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்

முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.

முழுமையான அணு சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவு 14 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கடந்த ஜூலையில் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) இலங்கை உத்தியோகபூர்வமாக ஒப்பந்தத்தை அங்கீகரித்தாகவும், இலங்கையின் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அணுவாயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவற்றின் நீண்டகால மற்றும் நிலையான கொள்கையுடன் ஒத்துப்போகிறது என்றும் தெரிவித்தார்.

1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தில் (CTBT) கைசாத்திட்ட 13ஆவது நாடாக இலங்கை விளங்குகிறது. அதன்படி, கண்டி பல்லேகலவில் துணை நில அதிர்வு நிலையமும் நிறுவப்பட்டது.

அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்

இணக்கப்பாட்டை செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, முழுமையான அணு – சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) நிர்வாகப் பணிப்பாளர் பிலாய்ட் மற்றும் முழுமையான குழுவின் இடைவிடாத முயற்சிகளையும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராட்டினார்.

மேலும், 1996 இல் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து, தள ஆய்வுகள் (OSI) பிரிவுடன் நெருக்கமான ஒத்துழைப்பு உட்பட, முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) பணிகளுக்கு இலங்கை செயற்திறன்மிக்க வகையில் ஆதரவளித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 180 பேரின் பங்கேற்புடன் 2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த தள ஆய்வுகள் (OSI) கூட்டு களப்பயிற்சியை (OSI) இலங்கை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) தள ஆய்வு திறன்களை மேம்படுத்துவதற்கும் மேலும் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் இந்த பயிற்சி ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்.

இலங்கை இந்த உடன்படிக்கையை ஏற்று 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. மற்றும் உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடுகளை அடைவதற்கான நிர்வாக பொறிமுறைகளில் ஒரு அடிப்படை மைல்கல்லாக அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

முழுமையான அணு – சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) அணுசக்தி சோதனைக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க கூட்டு நம்பிக்கையை வளர்ப்பதற்காக செயற்படுவதுடன் மேலும் பனிப்போரின் ஆபத்தான அணு ஆயுதப் போட்டியை திறம்பட கட்டுப்படுத்தியது என்றார்.

மேலும், ஒப்பந்தத்தின் சரிபார்ப்பு பொறிமுறையானது அணு ஆயுதக் குறைப்புக்கு அப்பால் சிவில் மற்றும் அறிவியல் நோக்கங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு வலுவான சர்வதேச கண்காணிப்புக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரவு மையமொன்றையும் நிறுவியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அண்மைக்கால சவால்களுக்கு மத்தியில், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) மீளாய்வு மாநாட்டில், உலகளாவிய பாதுகாப்பைப் பேணுவதில் விரிவான முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) முக்கிய பங்கை இலங்கை வலியுறுத்தியதோடு, இலங்கை அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை அவசியப்படுத்தும் நாடுகள், அங்கீகரிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அணுவாயுத மயமாக்கல் மற்றும் நிராயுதபாணியாக்கத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது, மேலும் இந்த முக்கியமான இலக்குகளை அடைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NTPNW) இலங்கை இணைவதற்கான சட்டரீதியான ஆவணம் கடந்த நாட்களில் கையளிக்கப்பட்டதை அமைச்சர் அலி சப்ரி நினைவு கூர்ந்த அமைச்சர், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரிப்பதன் ஊடாக, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் நிராயுதமாக்கல் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இலங்கையின் நிலைபேறான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

  • இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி
    Spread the love         இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி இந்த ஆண்டில் இதுவரை 1654-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்படுத்திய சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்று (20) வரை இலங்கையில் மொத்தம் 1,654 உயிரிழப்பு ஏற்படுத்திய சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பொறுப்புடைய காவல்துறை பிரதி இன்ஸ்பெக்டர்…
  • டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.
    Spread the love         டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது. டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.குழந்தைகள் தனியுரிமை தொடர்பான மிகப்பெரிய தீர்வு ஒப்பந்தங்களில் ஒன்றாக, டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் செலுத்த உள்ளது. தனது தளம் குழந்தைகளின் தனியுரிமை தனது தளம் குழந்தைகளின் தனியுரிமையை மீறியதாகக் கூறப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் (293 மில்லியன் பவுண்டுகள்) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது…
  • கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை
    Spread the love         கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது சில இடங்களில் மழை இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி…
  • மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை
    Spread the love         மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கைபற்றாக்குறைக்கு மத்தியில் புற்றுநோய் மருந்து ரூ. 25,000-க்கும் மேல் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது புற்றுநோயாளிகளை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கப் பயன்படும் ஒரு அத்தியாவசிய மருந்து, நாட்டில் நிலவும் கடுமையான பற்றாக்குறைக்கு கள்ளச் சந்தையில் மத்தியில், கள்ளச் சந்தையில் ரூ. 25,000-க்கும் மேல் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது என மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவரும் நிபுணருமான டாக்டர் சமல் சஞ்சீவா,…
  • அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்
    Spread the love         அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் ஈரானியத் தலைமையைக் கவிழ்க்கும் நோக்கில், வரலாற்றிலேயே மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிப்பதாக வாஷிங்டன் உறுதியளித்ததைத் பேரழிவை ஏற்படுத்தும்” என்று ஈரான் வெள்ளிக்கிழமை கூறியது தொடர்ந்து, அமெரிக்காவின் எந்தவொரு புதிய அச்சுறுத்தல்களுக்கும் தனது பதிலடி “பேரழிவை ஏற்படுத்தும்” என்று ஈரான் வெள்ளிக்கிழமை கூறியது. “ஈரானுக்கு எந்த விதமான உயிர்நாடியையும்…