கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே வௌ்ளிக்கிழமை (01) கரடி தாக்கியுள்ளது.
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும்
- ETA ஒப்புதல் இன்றி இலங்கைக்குள் நுழைய இலங்கை அனுமதிக்கிறது.
- ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்
- சரக்குக் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு
- கண்டி மற்றும் கேகாலையில் உள்ள 10 பிரதேச செயலகப் பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகள்












