சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 06 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதற்கான அட்டைகளை ஆஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது









