யாழ்ப்பாணத்தில் வீதியில் எரிந்த வாகனம்
யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.
மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (21) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனம் திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடிய நிலையில், காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டும் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் முற்றாக எரிந்துள்ளது.
வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீ பிடித்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது









