ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

Spread the love

.ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
பிரபு தேவா


ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது ‘பயணி’ மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக

அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்

இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.


அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *