கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா

சீனா வெளிநாட்டு அமைச்சர்
Spread the love

கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கி, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின்

பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபரில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக

அலுவலகத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

சீன நிறுவனமொன்று இறக்குமதி செய்யத் தீர்மானித்த சேதன உரத் தொகைக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணமாகும்.

இந்த நிலையில், அண்மையில் குறித்த நிறுவனத்துக்கு இலங்கை 6.9 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *