வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்

Spread the love

வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்

தற்போது டுபாயில் உள்ளதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகரான சரித் சந்தகெலும் எனும் ரன்மல்லி என்பவரின் உறுவு முறை சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரன்மல்லி என்பவரின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் ரூபா பணத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *