பாம்பை தோளில் போட்டு தடவிய யாஷிகா ஆனந்த்

Spread the love

பாம்பை தோளில் போட்டு தடவிய யாஷிகா ஆனந்த்

தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இவர் பாடம், துருவங்கள் பதினாறு, உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். தற்போது கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வரும் யாஷிகா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், துபாய் பார்க்கில் இருக்கும் ஒட்டகம் மற்றும் கரடிக்கு உணவு கொடுப்பது, சிங்கத்தை கயிறு கட்டி இழுப்பது, பாம்பை தோளில்

தூக்குவது என்று விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *