சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!
ஏஎவ்பி செய்தியினால் சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!
இலங்கையில் யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திட்டுள்ள சர்வதேச
செய்திநிறுவனமான (AFP)ஏஎவ்பி, யுத்த குற்றங்களில் ஈடுபட்டர்வகளுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
ஏஎவ்பி இந்தச்செய்தி சர்வதேச ஊடங்களின் கவனத்தினை இன்று பெற்றுள்ளமையினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
மேலும் ஏஎவ்பி தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர்
முடிவடைந்த 37 வருட போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது.
உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும்
ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது.
மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை
மேற்கொள்ளலாம்.
நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல்
போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையினைச் ஏஎவ்பி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது.
‘ஐநாவே ! சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து’ என்ற முழக்கத்துடன் 2015ம் ஆண்டு நாடுகடந்த
தமிழீழ அரசாங்கம் முன்கையெடுத்திருந்த மில்லியன் கையெழுத்து போராட்டத்துடன் கருத்துருவாக்கமாக உருப்பெற்றிருந்த
இக்கோரிக்கை, படிப்படியாக தமிழர் தரப்புக்கள் அனைவரதும் முதன்மைக் கோரிக்கையாக மாறியுள்ளதோடு, இன்று ஐ.நா
ஆணையளரின் அறிக்கையூடாக முக்கிய பேசுபொருளமாக மாறியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது






