புங்குடுதீவில் வீட்டு திட்டம் – மக்களிடம் கையளிப்பு

Spread the love

புங்குடுதீவில் வீட்டு திட்டம் – மக்களிடம் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ” புங்குடுதீவு வீட்டுத்திட்டம்” இன்று (18) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்

ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை

மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய உள்ளிட்டோர்

பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.

புங்குடுத்தீவு 1 ஆம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு

செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம்,

பல தடைகளின் மத்தியில், இராணுவத்தினரின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *