பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -376 பேர் கைது

Spread the love

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -376 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றம் சம்பவங்களுடன் தொடர்புடைய 376 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த சந்தேக நபர்கள் கைது

செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 171 பேரும், கஞ்சா வைத்திருந்த 78 பேரும், சட்டவிரோத மதுபானம்

மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருளுடன் 127 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தினுள் முகக்கவசம் அணியாமல் இருந்த 2164 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சமூக இடைவெளி பேணப்படாமை தொடர்பில் 1765 பெயர் எச்சரிக்கப்பட்டு உள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *