உமா ஓய பணிகளை நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 பேர் வருகை

Spread the love

உமா ஓய பணிகளை நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 பேர் வருகை

உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பணிகளை

நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் (15) பிற்பகல் 6.00 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

உமா ஓய திட்டத்தின் சுமார் 95 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள வேலைகளை இவ் வருட

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் ஊடாக 120 மெகா வோட் நீர் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. வருகை தந்தவர்கள் PCR

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் காலப்பகுதிக்கு பின்னர் இரண்டாவது முறையாகவும்

PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் திட்டப் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *