கனகராயன் குளத்தில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து: வீதி எங்கும் சிதறி கிடக்கும் பொருட்கள்

Spread the love

கனகராயன் குளத்தில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து: வீதி எங்கும் சிதறி கிடக்கும் பொருட்கள்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு குறுக்காக கனகரக வாகனம் தடம்புரண்டு இன்று (08) விபத்துக்குள்ளானதன் காரணமாக அப்பகுதியில் வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்தின் காரணமாக கனகரக வாகனத்திலிருந்து பொருட்கள் வீதியெங்கும் சிதறியதால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *