இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை ,திமோர்-லெஸ்டே கடற்பகுதியில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
திமோர்-லெஸ்டே கடற்பகுதியில் உள்ள பண்டா கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்
எதுவும் இல்லை என்றும், நாட்டின் அனைத்து கடலோரப் பகுதிகளும் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அந்த மையம் மேலும் கூறியுள்ளது.
ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (GFZ) தகவல்படி, திமோர்-லெஸ்டேயின் திலி நகருக்கு வடகிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் (140 மைல்கள்)
தொலைவில் உள்ள பண்டா கடலில் சனிக்கிழமையன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 117 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக GFZ தெரிவித்துள்ளது.







