அர்னாப் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க உள்ளது
அர்னாப் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க உள்ளது; இலங்கையில் வானிலை தாக்கம் நாளை தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ எனும் மிகக் கடுமையான புயல், இந்தியக் கடற்கரையை நோக்கி நகர்ந்து
வருவதாகவும், இலங்கையில் அதன் நேரடி வானிலை தாக்கம் நாளை (28) முதல் படிப்படியாக தணியும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 11:30 மணி நிலவரப்படி, இந்த புயல் அமைப்பு காங்கேசன்துறையிலிருந்து சுமார் 820 கி.மீ வடகிழக்கில், அட்சரேகை 16.0°N
மற்றும் தீர்க்கரேகை 84.3°E-க்கு அருகில் மையம் கொண்டிருந்ததாக அந்மையகம் கூறியது. இந்த கடுமையான புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து
, நாளை காலை 11:30 மணியளவில் ஆந்திரப் பிரதேசம் வழியாக இந்தியக் கடற்கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாளை மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல சுற்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 1:00 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை
மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் திடீர் மின்னல் தாக்குதல்கள் குறித்து
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.







