சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டா விலைகள் உயர்வு
சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டா விலைகள் உயர்வு ,
கோதுமை மாவு விலை உயர்வைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டாக்களின் விலைகளை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 13 உயர்த்தப்படும் என இறக்குமதியாளர்கள் நேற்று அறிவித்தனர்.
இன்று (21) ஊடகங்களிடம் பேசிய அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன், கோதுமை மாவு விலை திருத்தத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து திருத்தப்பட்ட விலைகள் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.







