இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

இலங்கையில் எரிவாயு தட்டு பாடு
Spread the love

இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

இலங்கையில் எரிவாயு தட்டு பாடு இன்று முதல் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீவு முழுவதும் எல்பி எரிவாயு உருளை விநியோகம் இன்று மாலை (19) முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,900 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவை ஏற்றி வந்துள்ள ‘ஃபிரான்சுவா’ என்ற கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

எரிவாயு சரக்கை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வழக்கமான எரிவாயு விநியோகம் வந்துகொண்டிருப்பதால், சந்தைக்கு தொடர்ச்சியான மற்றும் இயல்பான விநியோகத்தை உறுதி செய்வதற்காக விநியோகம் துரிதப்படுத்தப்படும் என்று லிட்ரோ கேஸ் லங்கா மேலும் கூறியுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் 16 முதல் 18 வரை 350,000 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் சந்தைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் நேற்று (18) தெரிவித்துள்ளது.