புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்
Spread the love

புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று, மோசமான வானிலை காரணமாக, புத்தளம்-அனுராதபுரம்

சாலையில் உள்ள மீ ஓயா பாலம் அருகே நேற்று இரவு (16) சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஏழு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் நான்கு ஆண்கள் லேசான காயங்களுடன் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து புத்தளம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.