இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு
இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு
இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய கோளாறு காரணமாக நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய அமைப்புச் செயலகம் (NSO) தெரிவித்துள்ளது.
இன்று (17) காலை சுமார் 11:45 மணியளவில் இந்த மின்வெட்டு ஏற்பட்டது.
மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய கோளாறு காரணமாக நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் முழுமையான மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய அமைப்புச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கூரை மேல் பொருத்தப்பட்ட சூரிய மின் தகடு உரிமையாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்களது அமைப்புகளை அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய அமைப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.







