யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
யோஷிதாவின் பணச்சலவை வழக்கில் மேலதிக சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷிதா ராஜபக்ஷ மீது தொடுக்கப்பட்ட பணச்சலவை வழக்கில், மேலதிக சாட்சிய
விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 30 வரை ஒத்திவைத்துள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் இன்று (15) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார்.
விசாரணையின் போது, அரசுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதன்பின், மேலதிக சாட்சிய விசாரணையை அக்டோபர் 30 வரை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், யோஷிதா ராஜபக்ஷ தனது இலங்கை கடற்படைப் பணிக்காலத்தில் ஊதியமாக சுமார் ரூ. 5,150,626 பெற்றதாக கொழும்பு உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, இன்று (15) சாட்சியமளித்த கடற்படை
அதிகாரி ஒருவர் இதை வெளிப்படுத்தியதாக அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட அந்தத் தொகையில் படிகள் சேர்க்கப்படவில்லை என்றும் அந்த சாட்சி மேலும் கூறினார்.







