நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை – வெளியுறவு அமைச்சு
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் பதிவான வெள்ளத்தால் இதுவரை எந்த இலங்கை நாட்டினரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வரவில்லை என வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கோர்கா மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து, காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்குள்ள இலங்கை சமூகத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாக அமைச்சு கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலை குறித்த சமீபத்திய தகவல்களை இலங்கையர்களுக்குத் தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் தூதரகம் எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்வது தொடர்பாக இலங்கை நாட்டினருக்குத் தூதரகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது என்றும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.
இன்று (11) அதிகாலை வேளையில் நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் வெள்ளம் தாக்கியதாகவும், இதில் பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் ஏராளமான சாலைகள், வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாக நேபாள ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.







