வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) காலை நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களிடம் 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவராவர்.
நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது

- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்

- கெஹெலிய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

- கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை








