பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்
பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் ,வைத்தியசாலைக்கு பயணித்த பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் இணைந்து கல்வீச்சு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான, அரச பேருந்து ஒன்றின் மீதே ,விஷமிகள் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மஹரகம அபேக்ஷா , வைத்தியசாலைக்கு செல்லும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு இடையில் ,இடம்பெறுகின்ற போட்டி முறுகல் காரணமாகவே, இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
புத்தளத்தில் இருந்து நாள்தோறும் பெருமளவிலான மக்கள், மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர் .
அவ்வாறு மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு சென்று வரும் மக்கள் பயன் பாட்டை தடுக்கும் நோக்குடன், இந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அந்த பேருந்தை பயன்படுத்தி ,பயண போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ,பயணிகள் கண்ணீர் மல்கத் தெரிவித்திருக்கின்றனர் .
கல்வீச்சு தாக்குதலை மேற்கண்ட 25 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளளனர் .
கைதானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவிக்கின்றனர் .
இலங்கையில் இவ்வாறு பேருந்துகள் மீது ,கல்வீச்சு தாக்குதல் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை, குறிப்பிடத்தக்கது.











