
5 பேரை காணவில்லை
சீரற்ற காலநிலை காரணமாக 5 பேரை காணவில்லை என காவல்துறையினர் தெரிவிதுள்ளதுடன் ,அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
அனர்த்தங்களின் சிக்கி பலர் பலி
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் சிக்கி ,பத்து பேர் பலியாகியும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறு காணாமல் போனவர்கள் ,மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
காணாமல் போனவர்களை, தேடும் பணி
பாதிக்க பட்ட பகுதியில் காணாமல் போனவர்களை, தேடும் பணியில் ,காணமல் போனவர்கள் உறவினர்கள் மற்றும் ,மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் .
கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக ,பல நூறு குடும்பங்கள் பாதிக்க பட்டு வருவதுடன் ,உயிரிழப்பு மற்றும் சொத்து அழிவு என்பனவும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்பது குறிப்பிட தக்கது .