3 வயது சிசுவை கழுத்து நெரித்து கொன்று உரைப்பையில் கட்டி வைத்த இளம் பெண்
தன்னுடைய பாட்டியுடன் இருந்த குழந்தை காணாமல் போனதாக நேற்று (19) கல்னேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.
குறித்த குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்றதன் பின்னர் குழந்தை பாட்டியுடன் இருப்பதாகவும் அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் அயல் வீட்டில் இருக்கும் வீட்டிற்கு குறித்த குழந்தையை எடுத்து செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது உரைப்பை ஒன்றை போடப்பட்டு குறித்த வீட்டின் கிணற்றிற்கு அருகில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
3 வயதும் 4 மாதங்களுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அயல் வீட்டில் வசிக்கும் 22 வயதுடைய பெண் குறித்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.