14 ஆயிரம் கோடிக்கு ஏவுகணை வாங்கி குவிக்கும் இந்தியா

Spread the love

14 ஆயிரம் கோடிக்கு ஏவுகணை வாங்கி குவிக்கும் இந்தியா

ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் – 3 என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

இந்நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக நம் ராணுவத்திற்கு

14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆகாஷ் எஸ்’ ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன ‘துருவ் மார்க் – 3’ இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான முன்மொழிவு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை

மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    Leave a Reply