வீழ்ந்து நொறுங்கிய ரசியா உலங்கு வானூர்தி

Spread the love

வீழ்ந்து நொறுங்கிய ரசியா உலங்கு வானூர்தி

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான

‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

ஹெலிகாப்டரில் 3 வீரர்களும், ஒரு தொழில்நுட்ப வல்லுனரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் பயிற்சியை முடித்துக்கொண்டு சுகோட்கா பிராந்தியத்தின் அனாடிர் நகருக்கு திரும்பியது.

அனாடிர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது

. இதனால் தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தது.

பின்னர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர

விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஒரு வாரத்துக்குள் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர் ‘எம்.ஐ.8’ விபத்துக்குள்ளாவது இது 2-வது முறையாகும். கடந்த 19-ந்தேதி

தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள கிலின் நகரில் ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதில்

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது நினைவுகூரத்தக்கது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply