லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

Spread the love

லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

பிரிட்டன் லண்டனில் பாராளுமன்றம் முன்பாக இன்று மதியம் ஒருமணியளவில் கறுப்பு யூலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடத்திய 1983 ஆம் ஆண்டு இனபடுகொலை நிகழ்ந்து இன்றுடன் 39 ஆண்டாகிறது .

அன்றில் இருந்து இன்றுவரை தனி சிங்கள மொழி மற்றும் ஆட்சி என முழங்கும் சிங்கள இனவாத பவுத்த வெறியர்களினால் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளபட்ட இனப் படுகொலைக்கு நீதி கிட்டவில்லை.

லண்டன் பாரளுமன்றம்  முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ
லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

இறுதி போரில் ஒரு லட்சத்திற்குஅதிகமான தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டுள்ள சிங்கள அரசுகளுக்கு இதுவரை ஐக்கிய நாடுகளினால் தண்டனை எதுவும் வழங்கப்படா நிலையில் லண்டன் போராட்டம் இடம்பெறுகிறது ..

இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பித்து திரிகின்றனர் .ஆனால் அப்பாவிகளை கொன்று அதனை வேடிக்கை பார்க்கும் நாடுகளாக பிரிட்டன் உள்ளிட்டவை இருப்பது தமிழர்கள் மத்தியில் கவலையை தருவித்துள்ளது.

இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்த பட்ட கறுப்பு யூலை இனப் படு கொலைக்கு என்று தீவரு வழங்க படும் ..?

கேள்வியோடே வலிகளை தாங்கிய வண்ணம் பயணிக்கிறது தமிழர் தேசம்.
லண்டன் பாரளுமன்றம் முன்பாக இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவு பகிர்வும் கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் என்றாலும் தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா ..?

( இதில் அழுத்தி லண்டன் போராட்டம் யாவும் ஒரே இணைப்பில் பார்க்கலாம் )

    Leave a Reply