லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன
லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன லண்டன் குடும்பம் ஒன்று திருகோணமலையில் ஒரு ஏமாற்று கொள்ளைக்கார குடும்பத்திடம் சிக்கியுள்ளனர். இக் குடும்பத்திற்கு நடந்தது என்ன?
திருகோணமலையிலுள்ள சுலக்சனா (பெயர் மாற்றம்) ஒன்லைன் zoom tuition கிளாஸ் எடுக்க முன்வந்ததன் மூலம் லண்டன் குடும்பம் அறிமுகம் ஆனது.
அதன் மூலம் அறிமுகம் ஆன பின் ஸ்ரீலங்கா வந்த போது இவர்களது வீட்டிற்கு சென்று தங்கினர்.
திட்டமிட்ட சுலக்சனா அவரது அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் இந்த லண்டன் குடும்பத்திடம் 10 இலக்சம் ரூபாயினை கேட்டுவாங்கியுள்ளனர்,
10 லட்சம் பணம் வாங்கி பின்பு தருவதாய் ஏமாற்றி குடும்பம் ஆக மோசடி செய்தது. பின்பு மொத்த குடும்பமும் wats up இல் லண்டன் நம்பரை Block செய்துள்ளதாக லண்டன் குடும்பம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த லண்டன் குடும்பம் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் பொலிசார் கருத்தில் எடுப்பதில்லை என மட்டக்களப்பு இரகசியம் உள் பெட்டிக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கவனமாய் செயட்படவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
இந்த குடும்பம் பலரை இவ்வாறு இலக்கு வைத்து செயற்பட்டு வருகிறது என தற்போது தெரியவந்துள்ளது.
முன்பு பிரான்ஸ் இல் இருந்து வந்த ஒரு குடும்பத்தினரிடமும் மேற்படி முறையில் பணம் வாங்கிய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில், தற்போது லண்டன் குடும்பம் ஏமாறியுள்ளது.
பொலிசார் மோசடி குடும்பத்திற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றனர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக முகநூல் பக்க செய்திகள் படங்களோடு செய்திகள் வெளியிட்டுள்ளன.















