லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு

Spread the love

லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு

பிரிட்டனில் மீளவும் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் கடைகளில்

பொருட்களுக்கு தட்டு பாடு ஏற்பட்டுள்ளது ,மக்கள் பீதியில்

முண்டியடித்து மீளவும் பொருட்களை வாங்கி குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

உணவு தட்டு பாடு ஏற்படாது என அரசு தெரிவித்து வருகிறது ,இவர்கள்

கூறுவது போன்று தொடர்ந்து ஆறு மாதங்கள் முடக்க பட்டால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் ,

சிட்டிக்கு மூன்று மிக பெரும் கடைகள் என்ற வகையில் திறக்க படும் நிலை ஏற்படும் ,அவ்விதம் ஏற்பட்டால் ஒரே இடத்தில மக்கள்

குவியும் நிலை ஏற்படுவதுடன் சமுக இடைவெளி இரு மீட்டர் பின்பற்ற வேண்டும்

அவ்வாறு நோக்கின் மக்கள் பல மைல் கணக்கில் கடைகளுக்கு முன்பாக காத்து கிடைக்கும் நிலை உருவாகலாம் ,அதனை

கருத்தில் கொண்டே மக்கள் இவ்விதம் முந்திகி சென்று பல மாதங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்

இவ்வேளை தமிழர் கடைகள் வழமை போன்று தமது பதுக்கல் நடவடிக்கையில்

ஈடுபட்டுள்ளனர் ,இம்முறை இவர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்

நிலை ஏற்படும் ,காரணம் ஆறு மாதம் முடக்க பட்டால் பதுக்க பட்ட பொருட்கள் காலவதியாகி விடும்
அபாயம் உள்ளது

எனவே இதனை கருத்த்தில் வைத்து தமிழர் கடைகள் செயல்படுவது சால

சிறந்தது ,மருந்து பொருட்கள் ,அரசி ,மா சீனி ,எண்ணெய் என்பனவே அதிகம் விற்று தீர்கிறது

மக்களே முந்துங்கள் ,வரும் முன் தடுப்போம் உயிரை காப்போம் ,அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி கொள்ளுங்கள்

Author: நலன் விரும்பி

Leave a Reply