ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி

ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
Spread the love

ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி

வீட்டில ராகி அப்பம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மக்களே ,சுவையே தனி ,ரெம்ப அட்டகாசமாக இருக்கும் .

இந்த ராகி அப்பம் செய்து கொள்ள தேவையான பொருட்கள் என்ன ..?
ராகி அப்பம் செய்வது எப்படி ..?

ராகி அப்பம் செய்வது எப்படி செய்முறை ஒன்று

மிக்சியில் ஒரு கப் அளவு சாதம் எடுத்து கொள்ளுங்க .அதே கப்பில துருவிய தேங்காய் எடுத்து ,இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .

அரைத்த பின்னர் இது கூட ராகி மாவு இரண்டு கப் சேர்த்து கொள்ளுங்க .அதே அளவு இரண்டு கப் தண்ணி சேர்த்து நன்றாக கரைத்து பின்னர் அரைத்து எடுங்க .

ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி

இப்போ இதை பாத்திரத்தினுள் போட்டு, ஒரு கரண்டி உப்பு போட்டு இதனை புளிக்க வைத்திடுங்க .

ஒரு இரவு முழுதும் ஊற வைத்து பொங்கி வந்த பின்னர் ,மாவினை நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

செய்முறை இரண்டு அப்பம் சுடுதல்

இப்போ அடுப்பிலா அப்ப கடையா வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் மாவு அதில ஊற்றி ,ரவுண்டாக சுற்றி வாங்க .அப்பா வடிவில வந்த பின்னர் மூடி போட்டு வேக வைத்திடுங்க .

இப்போ ராகி அப்பம் ரெடியாடிச்சு .

இது கூட சட்னி அல்லது நீங்கள் விரும்பும் குருமா ,முட்டை தொக்குடன் சேர்த்து சாப்பிடலாம் .

மிக இலகுவான முறையில் சுவையான தரமான ராகி அப்பம் ரெடியாடிச்சு மக்களே.

Leave a Reply