ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

Spread the love

ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

உக்கிரேன் நாட்டின் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ரசியாவின் அகோர தாக்குதலில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்து வருகிறது
இதுவரை ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட உக்கிரேன் மக்கள் பலியாகியுள்ளனர்

தொடர்ச்சியாக முன்னேறி வரும் ரசியா இராணுவத்தினரால் உக்கிரேன் முக்கிய நகரான Kherson பகுதியில் வைத்து அறுநூறு அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்


ரசியா இராணுவத்தால் கைது செய்ய பட்ட அறுநூறு மக்களும் Kherson மாவட்டத்தின் chambers பகுதியில் கைதானவர்கள் ,அவர்களே கோர வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

இங்கு சிறை பிடிக்க பட்ட அறுநூறு மக்களும் Crimea மானில பகுதிக்கு அழைத்து செல்ல பட்டு அங்கு கோர வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வருவதாக உக்கிரேன் உளவுத்துறை ஆதார தகவலுடன் செய்தி வெளியிட்டுள்ளது

ரசியா நாட்டின் இந்த சம்பவம் மனித உரிமை மீறலாக பதிய பெற்றுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபை முதல், பல நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன

ரசியா வதை முகாமில் தடுத்து வைக்க பட்டுள்ள மக்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது,
ஆனால் ரசியா நாடோ உக்கிரேனின் இந்த தகவலை மறுத்து வருகிறது

ரசியாவின் இந்த மறுப்பு தகவலின் வெளிப்பாடு அங்கு கைது செய்ய பட்டு வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வரும் அனைவரும் படுகொலை செய்யபடலாம் என அஞ்ச படுகிறது

ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

இதுவரை இரு நூற்றுக்கு மேலான மனித புதைகுழியை தாம் கண்டு பிடித்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்து வருகிறது,அந்த புதை குழிகளிற்குள் கண்கள், கைகள் கட்ட பட்ட சடலங்கள் மீட்க பட்டுள்ளன


ரசியா வதை முகாமில்

உக்கிரேன் மண்ணில் இடம்பெறும் மனித படுகொலைகளும் ,அங்கு இடம்பெறும் அநீதிகளுக்கு ,மக்கள் வாழ்விடங்கள் அழிவிற்கும் யார் பொறுப்பு கூறுவது என்ற கேள்வி எழுகிறது

உக்கிரேன் மண்ணில் இடம்பெறும் இந்த பேரழிவுகளுக்கு உக்கிரேன் ஆளும் அதிபரே கரணம் என்கிறது உக்கிரேன் நாட்டின் மக்கள் குழு ஒன்று

ரசியா வதை முகாமில் உயிருக்கு போராடுவது உக்கிரேனிய மக்கள் மற்றும் நாட்டை பாதுகாக்க துணைப்படைகளாகவும் ,இராணுவமாக மாறிய அப்பாவிகளே இரு நாட்டு அரச அதிபர்களின் கடும் போக்கால் பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பதே கள நிலவரம்

முள்ளி வாய்க்காலில் சிங்கள இராணுவம் அப்பாவி தமிழர்களையும் விடுதலை புலிகள் உறுப்பினர்களையும் இவ்வாறே கட்டி வைத்து வெட்டி கொன்றது ,போரில் இவ்வாறான காட்சிகள் இயல்பான ஒன்றே என்பதை இந்த சம்பவங்கள் மீள் இடித்து உரைக்கின்றன

அப்பாவிகளின் உயிர்களை காப்பாற்ற முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் இதுவே உலக நாடுகளின் எதிர் பரப்பாக உள்ளது

  • வன்னி மைந்தன்

    Leave a Reply