யாழில் விபத்து: மூவர் மரணம்

Spread the love

யாழில் விபத்து: மூவர் மரணம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் புகையிரதமும் பட்டா ரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.

பட்டா ரக வாகனத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அலவ்வ பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *